புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013




             "கையாலாகாத அரசு' என்று தி.மு.க. ஆட்சி மீது கடுமையாகக் குற்றம்சாட்டி, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யை 2011 சட்டமன்றத் தேர்தலின் போதுnakeeran வெளியிட்டார் ஜெய லலிதா. ஏராளமான இலவச அறிவிப்புகள், விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுதல், மின்தடையை ஒழித்தல், விவசாய மறுமலர்ச்சி என வாக்குறுதிகளுக்குப் பஞ்சமேயில்லை. தமிழக மக்கள் தீர்ப்பும் ஜெ.வை மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்குக் கொண்டு வந்தது. மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று, இரண்டாவது ஆண்டை (மே 16) நிறைவு செய்யும் ஜெ., தேர்தல் சமயத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எந்தளவு நிறைவேற்றியிருக்கிறார் என்பதை விரிவாக அலசக் களமிறங்கினோம்.

பதவியேற்ற நாளில் கோட்டைக்கு வந்த ஜெ. 7 திட்டங் களுக்கு கையெழுத்திட்டார். அதன்பிறகு ஆளுநர் அறிக்கை யிலும், பட்ஜெட்டிலும் மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. இவற்றில் பல ஏழை-நடுத்தர மக்களின் நலன் சார்ந்தவை என்பதால் வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளும் அதி கரித்தன.

20 கிலோ இலவச அரிசித் திட்டம்

வெள்ளை நிற ரேஷன் கார்டு தவிர மற்ற கார்டுகளுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி என்கிற இந்தத் திட்டம் ஏழை மக்களின் வரவேற்பிற் குரிய திட்டம். தி.மு.க ஆட்சியில் கிலோ 2 ரூபாய் எனவும் பிறகு 1 ரூபாய் எனவும் மாற்றப்பட்ட திட் டம், ஜெ. ஆட்சியில் இலவச அரிசி என்கிற நிலைக்கு உயர்ந்தது. நகரப் பகுதிகளைக் காட்டிலும் கிராமப்புற ஏழைகளுக்கு இத்திட்டம் நிறையவே பயனளிக்கிறது. மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் அரிசி யை, விலையில்லா அரிசி என மாநில அரசு வழங்கிவருகிறது. மற்ற மாநிலங் களைக் காட்டிலும் தமிழகத்தில் பொது விநியோகத்துறை நல்ல முறையில் செயல்படுவ தால், இத்திட்டம் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறையில் உள்ளது. எனினும், அரிசியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், விலையில்லா அரிசி என்பதால் எடையில்லா அரிசியாகவும் மாறி, அளவு குறைவாக விநியோகிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு கள் பரவலாக உள்ளன.
விலையில்லா ஆடு-பசுமாடு வழங்கும் திட்டம்

கிராமப்புற  மக்கள் -குறிப்பாக பெண் களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன் இதை செயல்படுத்துவதாக அரசு அறிவித்தது. இதன் மூலமாக புதிய வெண்மைப் புரட்சி ஏற்படும் என்றும் தெரி விக்கப்பட்டது. ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு குடும்பத் திற்கு 3 பெண் ஆட்டுக்குட்டிகளும் 1 கிடாயும் வழங்கப்படுகிறது. 1600 குடும்பங்களுக்கு இதுவரை 20 லட்சத்து 40 ஆயிரம் ஆடுகள் வழங்கப்பட்டிருப்பதாக  கால்நடைத்துறை அறிவித்துள்ளது. அதுபோல 1 லட்சத்து 67 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்பட்டி ருக்கின்றன. இவற்றால் அரசின் ஆவின் நிறு வனத்தில் 5% பால் உற்பத்தி உயர்ந்துள்ளது.

ஆடு, மாடுகளை வாங்குவது அவற்றை பராமரிப்பது ஆகியவற்றில் நிறைய குழப்பங்கள் இருப்பதை அரசு அதிகாரிகளே ஒப்புக்கொள் கின்றனர். பசுமாடுகளை பயனாளிகளே தேர்ந்தெடுக்கவேண்டும். மாடுகளுக்கான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கால்நடைத் துறை மேற்கொள்ளவேண்டும். ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தீவனம் கிடைக்கும் வகையில் தீவனப் பயிர் பெருக்கத் திட்டத்திற்கும் உத்தர விடப்பட்டது. இவையனைத்துமே முழுமையாக நிறைவேறாமல் உள்ளன. தீவனமின்றியும் நோய் பாதிப்பினாலும் பல இடங்களிலும் ஆடுகள், கசாப்புக் கடைகளுக்கு வந்துவிட்டன. பசுமாடுகளைப் பொறுத்தவரை 30 ஆயிரம் ரூபாய்க்கு மேலான வெளிநாட்டுக்  கலப்பினக் கறவை மாடுகள் வழங்கவேண்டும் என்பது திட்டம். ஆனால், பெரும்பாலானவை 15ஆயிரம் ரூபாய் விலையில் இந்தியக் கலப்பின மாடுகளாகவே வாங்கப்பட்டுள்ளன. நிர்வாகக் குளறுபடிகளால் இத்திட்டம் முழு இலக்கை எட்டவில்லை என்றாலும் கிராமப்புற ஏழைப்பெண்களின் நம்பிக்கைக்குரியதாக இருக்கின்றன விலையில்லா ஆடுகளும் பசுமாடுகளும்.

மாணவர்களுக்கு லேப்-டாப்


+2 பயில்வோர், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் என்கிற அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மாணவ சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கானதாகப் பாராட்டுகளைப் பெற்றது. மொத்தம் 68 லட்சம் லேப்-டாப்பு களுக்காக 10 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 5 ஆண்டுகளில் முழுமையாக வழங்கப்படும் என ஜெ. அரசால் அறிவிக்கப் பட்ட இத்திட்டத்தின் முதற்கட்டமாக பிரபல கம்ப்யூட்டர்  தயாரிப்பு நிறுவனங்களான லெனோவா, ஹெச்.சி.எல், விப்ரோ, மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த  நிறுவனம் ஆகியவற்றிடம் ஆறேகால் லட்சம் லேப்-டாப்பு கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த விலையில்லா லேப்-டாப்பில் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம், ஸ்டாட்டர் எடிஷன், கேமரா, வயர்லெஸ், டி.வி.டி.ரைட்டர், வேர்டு- எக்ஸல்- டேட்டா பேஸ் புரோகிராம் கள் மற்றும் கல்வி தொடர்பான சாஃப்ட்வேர் கள் இடம்பெற்றிருந்ததுடன் பெரிய ஸ்க்ரீன், 2 ஜிபி ரேம், 300 ஜி.பி. ஹார்டு டிஸ்க் என மாணவர்களுக்குப் பயனுள்ள சாஃப்ட்வேர்கள் ஹார்டுவேர்கள் இணைந்திருந்தன. மாணவ- மாணவியர் மிகவும் எதிர்பார்ப்புடன் இதனை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். எனினும் 2012-13ஆம் ஆண்டில் 19 லட்சம் லேப்-டாப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒன்றரை லட்சம் மட்டுமே வழங்கப்பட்டன. பல கல்லூரிகளின் மாணவர்களும், +2மாணவர்களும் பாலிடெக்னிக் மாணவர்களும் லேப்-டாப் கேட்டு போராடும் நிலைமையைத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காண முடிகிறது.

தாய்லாந்து  நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தி னால் எதிர்பார்த்த அளவிற்கு லேப்-டாப்புகளைப் பெறமுடியவில்லை என்று சட்டமன்றத்தில் ஜெ. தெரிவித்தார். பெரிய நிறுவனங்களின் லேப்-டாப் என்று சொல்லிவிட்டு, இரண்டாம்தர தயாரிப்புகளான தாய்லாந்து நாட்டு லேப்-டாப்பு களை வழங்க முடிவெடுத்து, அதிலும்  வெள்ளத் தைக்  காரணம்  காட்டி தாமதப்படுத்துவது ஏன் எனப் புரியாமல் இருக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

மிக்சி-கிரைண்டர்-மின்விசிறி திட்டம்

பெண்களின் பெரும்பான்மையான நேரம் சமையல்கட்டில் முடங்காமல் அவர்களை மீட்டவை அறிவியல் சாதனங்கள்தான். அதனடிப்படையில் மிக்சி-கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்து நடைமுறைக்கும் கொண்டு வந்தது ஜெ. அரசு. மலைப்பகுதிகளில் வசிப்பவர் களுக்கு மின்விசிறி தேவைப்படாது என்பதால் அவர்களுக்கு மின்சார அடுப்பு வழங்கப்படும் எனத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இலவச அரிசி பெறும் தகுதிகொண்ட 1கோடியே 85 லட்சம் ரேஷன் அட்டைதாரர் களுக்கானது இத்திட்டம். 2011ஆம் ஆண்டில் 25 லட்சம் வீடுகளுக்கும் 2012-ல் 25 லட்சம் வீடுகளுக்கும் இந்த விலையில்லாப் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, இந்நேரம் 50 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பயனடைந்திருக்க வேண்டும். ஆனால், டெண்டர் குளறுபடிகளால் இதுவரை 13 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே இவை வழங்கப்பட்டுள்ளன. விலையில்லாமல் தரப்பட்டபோதும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மூன்றுமே தரத்தில் சிறப்பாக உள்ளது என்கிறார்கள் மின்சாரம் இருக்கும் நேரத்தில் இவற்றைப் பயன்படுத்தும் பயனாளிகள்.

தாலிக்குத் தங்கம்

பள்ளிப்படிப்பு முடித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 25ஆயிரம் நிதியுதவியுடன் 4 கிராம் தங்கம், பட்டம் அல்லது டிப்ளமா படித்தவர்களுக்கு 50ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம், கலப்புத் திருமணம் புரிவோர், விதவை மறுமணம் புரிவோர் உள்பட ஏற்கனவே நடைமுறையிலிருந்தவை உள்பட 5 வகையான உதவித்திட்டங்கள் இதில் அடங்கும். கடந்த 2 ஆண்டுகளில் 40 கோடி ரூபாய்க்கு மேல் இத்திட்டத்தின் கீழ் செலவிடப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் கதர் கிராமத்துறை அமைச்சர் பூனாட்சி பெருமையுடன் அறிவித்தார்.

தகுதியில்லாத பல ஜோடிகள் ஆளுந்தரப்பின் உதவியால் இத்திட்டத்தில் பயன்பெறும் அதே நேரத்தில், தகுதியுள்ள பலருக்கு இத்திட்டம் உதவிகரமாக இல்லை என்ற புகார்கள் தொடர்கின்றன. உதவித் தொகையை அதிகரித்துவிட்டு, பயனாளிகளின் எண்ணிக்கையை முன்பிருந்ததைவிட வெகு வாகக் குறைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

காதல்-கலப்பு மணத் தம்பதியினர் இப்போது, முன்கூட்டியே பதிவு செய்தால் மட்டுமே உதவி என்பதால் அவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

ஜெ.வின் முன்னோடித் திட்டங்கள் கடந்த இரண்டாண்டுகளில் மக்களிடம் இந்தளவு சென்றடைந்துள்ள நிலையில், விவசாயிகள்- மீனவர்கள் உள்ளிட்டோரின் நலனுக்காக அவர்  அளித்த வாக்குறுதிகளும், மின்நிலைமை, சட்டம்-ஒழுங்கு ஆகியவை குறித்து அவர் அளித்த உறுதிமொழிகளும் எந்தளவு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த புள்ளிவிவரங்களும் பொதுமக்களின் கருத்து களும் நிறையவே குவிந்துள்ளன.

(வரும் இதழில்)
-பிரகாஷ், இளையசெல்வன்

ad

ad