புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2013


தமிழர் படுகொலை நினைவு தின நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுவதில் ஒன்ரோறியோ அரசியல்வாதிகளிடையே போட்டி !!
May

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி  என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.
 
தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு  ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன் ,  ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், பிரோக்ரேச்சிவ் கோன்செர்வேற்றிவ் கட்சித் தலைவர் றிம் ஹூடக் ஆகியோர் ஆதரவு தெரிவித்து அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். காத்லீன் தலைமையில் நடந்து வரும் லிபரல் அரசு  2013 ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்த பின்னர் இக்கட்சியின் ஆட்சி தொடருமா , அல்லது மீண்டுமொரு தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமா என்பது இன்னமும் முடிவாகாத நிலையில் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு உணர்வுரீதியான தமிழர்களின் இந்நிகழ்விற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளதிலிருந்தே ஒன்ரோறியோ அரசியலில் தமிழ்ச் சமுதாயம் பிரதானமான ஒன்றாகவே கவனிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
 
தமிழனப் படுகொலை நாளை முன்னிட்டு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,
 
ஒன்ரோறியோ அரசின் சார்பில் கனடிய தமிழ்ச் சமுதாயம் கடைப்பிடிக்கும் தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். சிறிலங்காவில் 26 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததைக் குறிக்கும் உணர்வுபூர்வமான நான்கமாண்டு நினைவு தின நிகழ்வுகள் அனைத்திலும் நானும் உங்களுக்கு உறுதுணையாய் உங்கள் பக்கம் நிற்கிறேன். போரினால் அனைத்தையும் இழந்து இருண்டு போன மக்களின் வாழ்வினை இந்நாளில் நினைவு கொள்ளும் அதே வேளையில் வன்முறைகளை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கடமையுணர்ச்சியுடன் நாம் மீண்டும் உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரமிது. 
 
பன்முகத் தன்மையை பேணுவதில் நமது அரசாங்கம் முக்கிய பங்காற்றுகிறது. மிகுந்த பலமும் , கருணையும் நிறைந்ததாக நாம் கட்டியெழுப்பியுள்ள  நம் சமுதாயத்தின் உயிர் நாடியே நம்மிடம் இருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை தான். இப்படியான சமுதாயங்கள் நிறைந்துள்ள ஒன்ரோறியோ மாகாணத்திற்கு முதல்வராக இருப்பதை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். ஒன்ரோறியோவில் தமிழ் கனடிய சமுதாயத்தின் பங்களிப்பு அளப்பரியது. 
 
பல வகைகளிலும் ஒன்ரோறியோ ஏற்றம் பெற உறுதுணையாய் இருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் உணர்வு பூர்வமான இந்நாளில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
 
Kathleen Wynne
Premier
----------------------------------------
 
தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,
 
தமிழினப் படுகொலை நாளின் நான்காவது நினைவு தினம் கடைபிடிக்கப்படும் இந்த வேளையில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். 27 ஆண்டு கால நீண்ட யுத்தத்தில் காணமல் போய் இன்னமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும் பலருக்கும், போரில் உறவுகளையும் , உடைமைகளையும் இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு , உங்களுக்காக தொடர்ந்தும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
 
சிறிலங்காவின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தோடர்பான விவகாரங்களில் வாழ்க்கையை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் சரியான நீதி கிடைக்கப்பட வேண்டும் என்பதற்காய் உலகத் தமிழர் அனைவருடனும் இணைந்து நாம் போராடி வருகிறோம். 
 
இந்த நேரத்தில் போருக்குப் பின்னரும் உள தைரியத்துடன் , பல இன்னல்களுக்கு மத்தியிலும் சிறிலங்காவின் பிற பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் பல ஆயிரக்கணக்கான மக்களை பாராட்ட வேண்டியது அவசியமான ஒன்றாகும். மனித உரிமைகளும் , நீதியும் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை உலகுக்கு உணர்த்துவதே இந்த நினைவு தினத்தின் முக்கிய நோக்கமாக கொள்ளப்பட வேண்டும். 
------------------------------------------------------------
 
தமிழினப் படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ ப்ரோக்ரேச்சிவ் கோன்செர்வேற்றிவ் கட்சித் தலைவர் றிம் ஹூடக் விடுத்துள்ள அறிக்கையில் ,
 
நீண்ட சரித்திரத்தை உடைய சிறிலங்க போரின் நான்காமாண்டு நினைவு தினத்தில் தமிழ் கனடிய சமுதாயத்துடன் ஒன்ரோறியோ புரோகிரேச்சிவ் கோன்செர்வேற்றிவ் கட்சியும் இணைந்து கொள்கிறது. 
 
இறுதிக் கட்டப் போரில் கொன்று குவிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை நாம் ஒருபோதும் மறக்கவில்லை என்பதை நினைவு கூறுவதே இந்த நாளின் நோக்கம். போரில் உயிரிழ்ந்த அப்பாவி மக்களுக்கும் , உறவுகளையும் , உடமைகளையும் இழந்து சிறிலங்கா மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் இதற்கான நீதியினைப் எப்படியும் பெற்றாக வேண்டும் என்ற வாய்ப்பினை மீண்டும் வழங்குகிறது இந்த நாள். உலகிலேயே புலம்பெயர்த் சிறிலங்கத் தமிழர்கள் பெரும்பாலானோரைக் கொண்ட மாகாணம் ஒன்ரோறியோ. போர் அபாயத்திலிருந்து தப்பி தங்கள் உயிரைக் காத்துக் கொளவும் மீண்டுமொரு புதிய வாழ்வினைத் தொடங்குவதற்குமாகவும் ஒன்றோரியோவைத் தெரிவு செய்த தமிழ்ச் சமுதாயம் , தங்களுக்கான நீதியை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதே வேளையில் இம்மாகாணத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 
 
நாம் இப்போது எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறிலங்காவில் இன்னமும் பல போராட்டங்களைச் சந்தித்து வரும் அப்பாவி மக்களுக்கு மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என்ற பெரும் விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு வர வேண்டும். இந்த விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கோன்செர்வேற்றிவ் கட்சியினைச் சேர்ந்த பிரதமர் ஸ்டீபென் ஹார்ப்பர் மற்றும் வெளியறவு அமைச்சர் ஜான் பயர்ட் எடுத்துள்ள நிலையான முடிவுகளுக்காக நான் பெருமையடைகிறேன். ஒன்ரோறியோ ப்ரோக்ரேச்சிவ் கட்சி வேட்பாளர்களான தமிழ் கனடிய சமுதாயத்தைச் சேர்ந்த இருவர் கென் கிருபா - ஸ்காபுறோ கில்ட்வுட்  தொகுதியிலும், ஷான் தயாபரன் மார்க்கம் யூனியன்வில் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் வெறுமனே தொழிலதிபர்களோ , தலைவர்களோ அல்ல. மைக்குக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக போராடி வருபவர்கள்.
 
உணர்வுபூர்வமான இத்தினத்தினை நீங்கள் கடைப்பிடிக்கும் வேளையில் மீண்டுமொருமுறை தமிழ் கனடிய சமுதாயத்திற்கு எனது ஆதரவினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆண்டு நினைவு தின நிகழ்வுகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு வரும் கனடியத் தமிழ் தேசியப் பேரவையின் பணிகளைப் பாராட்டுகிறேன். 
 
Sincerely,
 
Tim Hudak, MPP
Ontario PC Leader
 
 
இவ்வாறு ஒன்றோரியோவின் பிரதான கட்சிகளைச் சேர்ந்த மூன்று தலைவர்களும் தமிழினப் படுகொலை நினைவு தினத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

ad

ad