புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2013

தவறான ரயில் பயணச்சீட்டைக் காட்டியதால் அமைச்சருக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தில் தவறான பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் பயணித்த அமைச்சர் தியரி குரோஸ்ஜீன்(Thierry Grosjean) என்பவர் பயணச்சீட்டு மதிப்பில் இரண்டு மடங்கை அபராதமாகச் செலுத்தியுள்ளார்.
இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் இந்தப் பயணச்சீட்டு காலாவதியாகி விட்டதால் அந்தச் சீட்டு அமைச்சருக்குப் பயன்படவில்லை.
நியுசேட்டல் நகரத்துக்கு மோட்டியர்ஸில் இருந்து அமைச்சர் ரயிலில் புறப்பட்டுச் சென்ற பொழுது பயணச்சீட்டு பரிசோதகர் வந்துள்ளார். அமைச்சரும் தன்னிடமிருந்த பயணச்சீட்டை எடுத்துக் காட்டியுள்ளார்.
ஆனால் பரிசோதகர் அந்தச் சீட்டு காலாவதியாகி இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது என்று கூறி சீட்டு இல்லாமல் பயணம் செய்த அமைச்சரிடம் இரண்டு மடங்கு கட்டணத்தை அபராதமாக வசூலித்து விட்டார்.
அங்கு பயணச்சீட்டுகள் குறிப்பிட்ட காலம் மற்றும் நிலப்பகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது. பயணச்சீட்டை சரியாகப் பார்க்காமல் ரயிலில் ஏறிய தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து வருத்தமடைந்துள்ளார்.
அடிக்கடி ரயிலில் போகும் வழக்கம் தனக்கு இல்லாததால் இந்தப் பயணச்சீட்டு இரண்டு மணிநேரத்துக்கு முன்பே காலாவதியாகிவிட்டதைத் தான் அறியவில்லை என்று ஊடகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ad

ad