புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

மதுரையில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள்

மதுரையில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா வீடியோர் கான்பரசிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார்.
அங்கு 1 இட்லி 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படும்.


ஏழை மக்களின் வசதிக்காக சென்னையில் மலிவு விலை அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் மதுரை உள்பட மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு உணவகங்கள் திறக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து மதுரை மாநகரில் அம்மா உணவகம் அமைப்பதற்கான பணிகளில் மாநகராட்சி கடந்த சில தினங்களாக முனைப்பு காட்டி வந்தது. அதில் முதல்கட்டமாக 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கட்டிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் உணவு சமைப்பற்கு தேவையான பாத்திரங்களும், சாப்பிடுவதற்கு தேவையான தட்டு போன்ற பாத்திரங்களும் வாங்கப்பட்டன.
அங்கு பணியாற்ற மகளிர் சுய உதவிக்குழுவினரை சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு உணவகத்திற்கும் தலா 12 பெண்கள் வீதம் 10 உணவகத்திற்கு 120 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள உணவகங்களுக்கு நேரில் அழைத்து செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்பின் கடந்த 2 தினங்களாக மதுரையில் உள்ள உணவகங்களில் இவர்களுக்கு பயிற்சி தரப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் உள்ள அம்மா உணவகங்களை, முதல்அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரசிங் மூலம் மதியம் 3 மணிக்கு திறந்து வைக்கிறார். இதற்காக மதுரை மேலவாசல் அம்மா உணவகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் கூறியதாவது:
மதுரை மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டு உள்ள அம்மா உணவகங்களை முதல்அமைச்சர் ஜெயலலிதா ஞாயிறு (மாலை) மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைக்கிறார். இந்த உணவகம் காலை 7 முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும் செயல்படும். காலையில் 1 இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மதியம் 1 சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், 1 தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் அம்மா உணவகம் அமைக்கப்படும் 10 இடங்களின் விவரம் வருமாறு:
ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி தேன்மொழி கல்யாண மண்டபம். 
ஆனையூர் (பழைய) நகராட்சி அலுவலகத்திற்குள் உள்ள வளாகம்.
புதூர் மாநகராட்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கட்டிடம். 
ஆத்திக்குளத்தை அடுத்த காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடம். 
ராமராயர் மண்டபம் அருகில். 
புதுராம்நாடு சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடம். 
சி.எம்.ஆர்.ரோட்டில் உள்ள மாநகராட்சி கட்டிடம். 
பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மேலவாசல். 
திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகில். 
பழங்காநந்தம் பஸ் நிலையம் அருகில்.

ad

ad