புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2013

13வது திருத்தத்திற்கு எதிராக போராட தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்!- பிள்ளையான்
13வது திருத்தச் சட்டத்தை பலவீனமடையச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கெதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து போராடுவதற்குத் தயாராகவிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் என மார்பு தட்டிக்கொள்ளும் கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இந்த விடயத்தில் முதுகெலும்பில்லாதவர்களாகவே செயற்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் ஒரு கோடி 80 இலட்சம் செலவில் நிருமாணிக்கப்பட்ட ரெஜி கலாசார மண்டப திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.சகாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் க.தனபாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

“வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் யாழ்ப்பாணத்து வர்த்தகரெல்லாம் எமது பிரதேசங்களை விட்டு வெளியேற்ற வேண்டும் அவர்களுடன் வாழ முடியாது யாழ்ப்பாண தலைமையின் கீழ் எங்களால் இருக்க முடியாது என்று முரளிதரன் அன்று முடிவெடுத்ததன் காரணமாக அதன் தாக்கத்தால் பல சஞ்சலங்கள், சவால்களையும், விமர்சனங்களுக்கும், அழிவுகளுக்கும் உருவாகின. அவர் அன்று எடுத் முடிவு ஒரு உறுதியானதும் காத்திரமானதுமான முடிவாகவிருந்தது. ஆனால் முடிவையெடுத்த தலைவர் தொடர்ந்தும் செயற்படுத்த முடியாதவராக இருந்தமையினால் அந்த உண்ணதமான முயற்சியை துரதிஸ்டவசமாக எங்களால் முன்னெடுக்க முடியவில்லை.

அன்று முரளிதரனால் எடுக்கப்பட்ட முடிவு முழுமையாக அமுலாக்கப்பட்டிருந்தால் இன்று கிழக்கு மாகாணத்திலே ஒரு தனிப்பெரும் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருந்திருக்கும் கிழக்கு மாகாணத்தின் தலைவராக முரளிதரன் இருந்திருக்க முடியும்.

இந்த நாட்டிலே பேரினவாத சிந்தனை கொண்ட சிலர் 13 வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை எமது கட்சி ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.

இந்த விடயம் தொடர்பாக ஆராயும் கூட்டம் அலவி மாளிகையில் நடைபெற்றது இதில் கருணா அம்மான் நான் அருண்தம்பிமுத்து ஆகியோரும் மட்டக்களப்பு சார்பில் பங்கேற்றோம். நாங்கள் பொறுப்புள்ள கட்சியில் இருக்கிறோம் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவன் நாங்கள் 13வது திருத்தச் சட்டத்தை எதிர்த்தால் மக்களுக்கு அதிகாரம் கிடைக்காது என்று கூறினேன். இந்த கூட்டத்தில் எந்த முவும் எட்டப்படவில்லை.

கூட்டத்தின் மதிய உணவு வேளையின் போது வெளியே வந்த போது நாங்கள் போராட்டத்திலிருந்து வந்திருக்கின்றோம், எமது உயிரைப் பணயம் வைத்துப் போராடினோம், பலரைக் கொல்லக்கொடுத்திருக்கிறோம் குறைந்தது இந்த மாகாணத்தைக்கூட காப்பாற்ற முடியாதவர்களாக இருக்கிறோம் என அம்மானிடம் நான் கூறினேர். அதற்கு அவர் என்னால் ஒன்றும் செய்ய முடியாது முடிந்தால் உன்னுடைய எதிர்ப்பைக் காட்டிக்கொள் என்று கூறினார். அருண் தமபிமுத்து அவர்கள் 13வது திருத்தச் சட்டம் தேவையில்லை அது கிழக்கு மாகாணத்திற்கு உகந்ததல்ல என்று கூறினார் .

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதித் தலைவர் கருணா அம்மான் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் அருண் தம்பிமுத்து எமது மக்களுக்கு அதிகாரம் மாகாணசபை அதிகாரம் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளார்கள்.

நாங்கள் எமது மக்களைப் பற்றி சிந்திக்கின்றவர்கள் அதன் காரணமாகத்தான் 26 வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை 2008 ஆம் ஆண்டு பொறுப்பேற்றோம். அதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்தனர். இருந்த போதிலும நாங்கள் 2012 வரை சிறப்பாக ஆட்சி செய்தோம்.

ஆனால் இன்று கட்சிகளுக்குள்ளே போட்டியும் பேரினவாதிகள் மாகாண சபையின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் தற்போது மேலோங்கி நிற்கிறது. இந்த விடயங்களில் நாங்கள் தெழிவாக இருக்கிறோம்.

13 வது திருத்தச் சட்டத்தைக் காப்பாற்றுவது தொடர்பாக தென்னிலங்கை அரசியல் வாதிகளுடனும் தேவைப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனும் இணைந்து இணைந்து போராட தயாராகவுள்ளோம். இந்த வியடத்தில் கருணா அம்மான், டக்லஸ் தேவானந்தா போன்றவர்கள முதுகெலும்பில்லாதவர்கள்.

தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய ஒரே தீர்வு மாகாணசபை மாத்திரமே மாகாணசபையிலுள்ள அதிகாரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு இதனை அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் கூறியுள்ளோம். இதனைப் பலிவீனப்படுத்தும் எந்த முயற்சிகளுக்கும் இடமளிக்க மாட்டோம்” என்றார்

ad

ad