புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2013

அமைச்சர்களான வீரவன்ச, சம்பிக்கவின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காது -வாசு

ரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான அதிகாரக்குறைப்பும் இடம்பெறாமலேயே வடமாகாண சபை
தேர்தல் நடைபெறும். அமைச்சர்களான சம்பிக ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்டோரின் முயற்சிகள் எதுவும் பலளிக்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் ஆளும் கட்சியில் பெரும்பாலானோர்கள் இல்லை. ஒரு சில இனவாத தரப்புகளே தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்க கூடாது என்று போராடுகின்றன. வட மாகாண சபை தேர்தலில் மாத்திரம் அதிகாரக் குறைப்பிற்கு முயற்சித்து இன்று இனவாத கட்சிகள் சிங்கள மக்களிடையேயும் அவமானப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் வாசு தேவ நாணயக்கார தொடர்ந்தும் கூறுகையில்,
வட மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுக்கள் வெளியில் வந்த நாள் முதல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உட்பட பேரினவாத அமைப்புகள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தன. இது மிகவும் மோசமான நடவடிக்கையாகும்.
ஏனெனில் கடந்த 25 வருட காலமாக நாட்டில் 15 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அதேபோன்று மாகாண சபைகளும் முறையாக செயல்படுகின்றன. யுத்தம் முடிவடைந்தும் கிழக்கு உட்பட பல மாகாண சபைகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால் அதன் போது 13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்காமல் வட மாகாண சபையை மாத்திரம் குறிவைத்து அதிகாரங்களை குறைக்க முற்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
இது உள் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் விடயங்களாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெளிவாக கூறியுள்ளோம். எமது கருத்துக்களுக்கு அவர் மரியாதையளித்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்ய அமைச்சர்களான சம்பிக ரணவக மற்றும் விமல் வீரவன்ச உட்பட சில அமைச்சர்கள் யோசனைகளை முன் வைக்கையில் அதற்கு எதிராக நாங்கள் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தோம்.
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரங்களை செயலிழக்க செய்ய இடமளிக்கப் போவதில்லை என்றார்.

ad

ad