புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2013

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
ஜெயலலிதா போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து காரில் வந்தார். வழிநெடுக நின்ற தொண்டர்கள், மேள–தாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு மாலை 3.25 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா வந்தார். அவருக்கு, கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், தலைமை நிலைய செயலாளர் பழனி மாணிக்கம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின்னர், கூட்டம் நடத்த இடமான அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, அங்கு நின்றபடி தொண்டர்களை பார்த்து இரட்டை விரலை காட்டி கையசைத்தார். பதிலுக்கு, தொண்டர்களும் அவரை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். அதனைத்தொடர்ந்து, மாலை சரியாக 3.30 மணியளவில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடங்கியது.


முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 40 தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 9 மாவட்ட அவைத்தலைவர்கள் உள்பட 25 சிறப்பு அழைப்பாளர்கள், அமைச்சர்கள், மேயர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 297 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மாலை 3.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 5.15 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:

1. இந்திய திருநாட்டில் எந்த ஒரு முதலமைச்சரும் செய்திராத திட்டங்களை நிறைவேற்றிக்காட்டி இமயத்தைக்கூட குனிந்து பார்க்கும் உயரத்திற்கு தமிழகத்தை உயர்த்தி, ஈராண்டில் பல்லாண்டு பேசும் வரலாற்று சாதனைகளை படைத்திருக்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு தனது பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
2. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 110 விதியின் மூலம் தமிழக மக்களின் விதியை மாற்றியதோடு, நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த கூட்டுறவு சங்கத்தேர்தல்களை நடத்திக்காட்டி, ஜனநாயகம் தழைத்தோங்க வழி வகுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு தனது நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
3. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட செய்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, வரலாற்று சாதனை படைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
4. பருவ மழை பொய்த்த போதும், இடர்பாடு பங்கீட்டு முறைப்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட மறுத்த போதும், வேளாண் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், புதிய உத்திகளையும், நவீன நுண்ணீர் பாசன முறைகளையும் விவசாயிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததோடு, இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கி விவசாயிகளின் வாட்டத்தை போக்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
5.தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது வினியோக திட்டத்திற்கு குந்தகம் விளை விக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தினை நிறைவேற்ற முயற்சித்தல்; சர்க்கரை ஆலைகளின் மீதான கட்டுப்பாட்டை தளர்த்துதல்; குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிக்கும் அரசு போக்குவரத்துக்கழகங்கள் கொள்முதல் செய்யும் டீசலின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்துதல்; மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய மையத்தினை ஏற்படுத்த முயற்சி செய்தல் போன்ற கூட்டாச்சி தத்துவத்திற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளையும்;
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டாஸ் உரிமம் வழங்காதது; தமிழக மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் இலங்கை அரசை தட்டிக்கேட்காதது; தானே புயல் ஏற்பட்ட போதும், நீலம் புயல் ஏற்பட்ட போதும், வறட்சி கோரத்தாண்டவம் ஆடிய போதும், தமிழக அரசு கோரிய நிவாரண தொகைகளை வழங்காதது; தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் மாநிலத்தின் தேவைகளை எடுத்துச் சொல்லக்கூட போதுமான நேரத்தை ஒதுக்காதது; குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெயின் அளவை குறைப்பது; தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து வழங்காதது; இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாதது; தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காதது போன்ற பாரபட்சமான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட மத்திய அரசுக்கு இச்செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

6. இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் பாடுபட்ட தலைவர்களுக்கு நினைவுச்சின்னங்களை அமைக்க ஆணையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.
7. தமிழர்களின் நாகரீகத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்க ஆணையிட்டதோடு, தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு விருதுகளை புதிதாக அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
8. தொலைநோக்கு திட்டம் – 2023 என்ற ஆவணத்தை வகுத்து, அந்த இலக்கினை எய்தும் வண்ணம் தமிழகத்தில் தொழில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
9. அம்மா திட்டம் மற்றும் அம்மா உணவகங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி கொண்டிருக்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
10. சட்டம்–ஒழுங்கை பராமரித்து, தமிழ்நாட்டை அமைதிப்பூங்காவாக மாற்றியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
11. கல்விதான் கடைக்கோடி மனிதனின் உயர்வுக்கு ஒரே வழி என்பதை உணர்ந்து, கல்வியை அனைவரும் கற்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித் துக்கொள்கிறது.
12. மின்சார உற்பத்தியில் தமிழகத்தை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
13.இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழின பாதுகாவலர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறது.
14. தமிழக மீனவர்களின் நல்களைப் பாதுகாக்கும் வகையில் கச்சத்தீவை திரும்பப்பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இச்செயற்குழு மனதார பாராட்டி நன்றி தெரிவிக்கிறது.

15.அ.தி.மு.க. தொண்டர்கள், கட்சியினர் மீது கொடுக்கும் புகார்களின் மீது விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடி க்கை தேவைப்படும் பட்சத்தில், அதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளருக்கு பரிந்துரை செய்வ தற்கு, முதலமைச்சர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இச்செயற்குழு தனது முழு ஒப்புதலையும், அங்கீகாரத்தையும் அளிப்பதோடு, தேவை ஏற்படின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தையும் கட்சியின் பொதுச்செயலாளருக்கு இச்செயற்குழு முழு மனதோடு வழங்குகிறது.
16.  வலிமையான பாரதத்தை ஏற்படுத்தி, இந்தியாவை வல்லரசாக்க, தமிழக மக்களுக்கு கிடைக்கும் சலுகை கள் இந்திய மக்களுக்கு கிடைக்க, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பாரத நாட்டை வழி நடத்துவது அவசியம். இதனை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 40 தொகுதிகளையும் வென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க இச்செயற்குழு சபதமேற்கிறது. மேற்க ண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ad

ad