புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2013

ஜாதிக ஹெல உறுமயவின் 19வது திருத்தத்திற்கு முக்கிய அமைச்சர்கள் எதிர்ப்பு
ஜாதிக ஹெல உறுமய கட்சி 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் நோக்கில் நாடாளுமன்றில் சமர்ப்பித்த சட்டமூலத்தை அரசின் முக்கிய அமைச்சர்கள் 31 பேர் தீவிரமாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 18ம் திகதி ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான அதுரலிய ரத்ன தேரரே, 13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யும் நோக்கில் 19வது திருத்தத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
தனிநபர் பிரேரணையாகவே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டியூ குணசேகர,
13வது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தவர்களில் தானும் ஒருவன். அதன் காரணமாக அதற்கு எதிரரான எந்தவொரு சட்டமூலத்தையும் ஆதரிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்கள் 31 பேர் உட்பட பெரும்பாலானவர்கள் ஜாதிக ஹெல உறுமயவின் இந்த முயற்சிக்கு எதிராக தீவிர எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜாதிக ஹெல உறுமய தலைகீழாக நின்றாலும் இந்த சட்டமூலம் வெற்றிபெறப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad