புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2013

மாங்காடு ; தீ விபத்தில் 20 குடிசைகள் எரிந்து சாம்பல்
மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்கு உளுந்தூர்பேட்டை குமார மங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம். அவரது மனைவி
அஞ்சலை (வயது 35) உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தங்குவதற்காக செங்கல்சூளை உள்ளேயே குடிசை வீடு கட்டி கொடுக்கப்பட்டு இருந்தது.

நேற்று இரவு வேலை முடிந்து தொழிலாளர்கள் தங்களது குடிசைகளில் தூங்கினர். 11 மணி அளவில் திடீரென ஆறுமுகம் வீடு தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பக்கத்தில் உள்ள குடிசை களுக்கும் பரவியது. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் மனைவி, குழந்தைகளுடன் அலறிய டித்தபடி வெளியே ஓடிவந்தனர். தீ கொழுந்துவிட்டு எரிந்த தால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமானது.
தொழி லாளர்களால் தீயை அணைக்க நெருங்க முடியாத அளவுக்கு கடும் வெப்பமாக இருந்தது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, அம்பத்தூரில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது கருகிய நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர். அவர் அஞ்சலை என்பது தெரிந்தது.
வீட்டில் தீப்பற்றி எரிந்த போது வெளியே வர முடியாமல் அவர் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக மற்ற தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மொத்தம் 20 குடிசைகள் நாசமாகின. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சாம்பலானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ad

ad