புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2013

கிழக்கு மாகாண சபை அமர்வை ஆளும் தப்பினர் பகிஷ்கரிப்பு: கூட்டமைப்பினர் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு
கிழக்கு மாகாண சபையின் இன்றைய சபை அமர்வை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 20 பேரும் பகிஷஸ்கரித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான பொதுச் சபைக் கூட்டம் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று (18) காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாத்திரமே ஆளும் தரப்பு சார்பில் சமூகமளித்திருந்தார். கிழக்கு மாகாண சபையின் ஏனைய நான்கு அமைச்சர்களும் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ளாமல் பகிஸ்கரித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களில் ஆளுநர் மேலாண்மை செலுத்தி வருகிறார். அரச உயர்மட்டத்தில் முறையிட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்த இழுபறியைக் கண்டித்தே ஆளும் தரப்பு உறுப்பினர்களான நாம் அனைவரும் இன்றைய சபை அமர்வை பகிஸ்கரித்துள்ளோம் என மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்றுள்ளனர்.
13ஆம் அரசமைப்புத் திருத்தச் சட்டத்தில் கை வைத்து மாகாண சபை அதிகாரங்களை பிடுங்குவதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளைக் கண்டித்தே இக்கூட்டத்தில் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்றுள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி அறிவித்துள்ளார்.

ad

ad