புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2013

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 23 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த நபரொருவரை அவரால் பாதிக்கப்பட்ட சிலர் பிடித்து பத்தேகம பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இவர் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து  அதனூடாக குறித்த பெண்களை தொடர்புகொண்டுள்ளார்.

குறித்த நபர் இதுமட்டுமன்றி பலரை ஏமாற்றி பணமோசடியும் செய்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அம்பேகம, அம்பல சந்தியில் வைத்து குறித்த நபர் சிலரிடம் பணம் வசூலித்துக்கொண்டிருக்கும்போது கரந்தெனிய மற்றும் அம்பேகம வாசிகள் சிலர் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இவர் பிடிபட்ட வேளையில் இவரிடம் போலி அடையாள அட்டைகள், திருமண சான்றிதழ்கள் சிலவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணைகளிலுருந்து அவருக்கு 48 வயதெனவும், சுமார் 23 பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தான் திருமணம் செய்த பெண்கள் சிலரிடமிருந்து சொத்துக்களையும் இவர் எழுதி வாங்கியுள்ளதுடன்,  இவர் மொத்தம் 50 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை அவர்களிடமிருந்து பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad