புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013

பாராளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் என ஜெயலலிதாவை சந்தித்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்: சந்திரகுமார் 
தமிழக சட்டசபையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக எம்எல்ஏக்களின் பலம் 29ஆக இருந்தது. இதில் 6 எம்எல்ஏக்கள், அதிமுக அரசுக்கு ஆதரவாக திரும்பிவிட்டனர். இதனால் தேமுதிகவின் பலம் 23ஆக குறைந்தது.


இப்போது டெல்லி மேல்சபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மேலும் சில தேமுதிக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முக்கிய நிர்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ பாண்டியராஜன், 12.06.2013 புதன்கிழமை ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து தேமுதிக எம்எல்ஏவும், அக்கட்சியின் கொறடாவுமான சந்திரகுமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி: தொடர்ந்து உங்கள் கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் கட்சி பலவீனம் அடைவதாக நினைக்கிறீர்களா?
பதில்: ஜெயலலிதா அவர்களுக்கு முழுக்க முழுக்க தேமுதிகவை சிதைக்க வேண்டும். தேமுதிகவிலிருந்து அக்கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் கட்சியில் இருந்து யாரும் அதிருப்தியுடன் செல்லவில்லை. தேமுதிக எந்த நேரத்திலும் பலவீனம் அடையாது.
கேள்வி: விலைக்கு வாங்குவதாக சொல்கிறீர்களே. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
பதில்: 2011ல் தேர்தலில் வேட்பாளராக  நிற்கின்றபோது இவர்களின் சொத்துக் கணக்கு என்ன. இப்போது இவர்களின் சொத்துக் கணக்கு என்ன. இதுவரை சென்றவர்கள் பணத்துக்காக சென்றிருக்கலாம். இன்று முதல் அமைச்சரை சந்தித்தாரே (பாண்டியராஜன்) அவர் கடந்த சில மாதங்களாக இரண்டு விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அதைச் சொன்னால் ஆசசரியமாக இருக்கும். ஒன்று கட்சியில் பொருளாளர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தினார். இரண்டாவதாக,  எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் கொடுக்க வேண்டும் என்று தொந்தரவு செய்து வந்தார். கடந்த வாரத்தில் இந்தப் பிரச்சனை பெரியதாக இருந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டியராஜனுக்கு சீட் கொடுப்பதாக ஜெயலலிதா ஒப்புக்கொண்டதாகவும், அதனால்தான் பாண்டியராஜன் ஜெயலலிதாவை சந்தித்தார் என்றும் சொல்கிறார்கள். 
கேள்வி: முதல் அமைச்சரை சந்தித்த 7 தேமுதிக எம்எல்ஏக்களும் தொகுதிப் பிரச்சனைக்காக சந்தித்தோம் என்று கூறியிருக்கிறார்களே?
பதில்: விஜயகாந்த் உட்பட எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் தொகுதிப் பிரச்சனை தொடர்பாக முதல் அமைச்சரை சந்திக்க கடிதம் கொடுத்திருந்தோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எங்களுக்கு சந்திக்க நேரம் ஒதுக்குவது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம், அதற்கு அவர் நான் இந்தக் கடிதத்தை முதல் அமைச்சர் பார்வைக்கு அனுப்ப மட்டுமே முடியும் என்றார், பின்னர் நாங்கள் முதல் அமைச்சரின் செயலாளரை சந்தித்துத்தான் கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. 
கேள்வி: இன்னும் சில தேமுதிக எம்எல்ஏக்கள் அதிருப்தியின் காரணமாக முதல் அமைச்சரை சந்திக்கக் கூடும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவருகிறதே? உங்கள் கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சம் தொண்டர்கள் மத்தியில் இருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: 5 வருடத்திற்கு முன்பு விஜயகாந்த் ஒரு எம்எல்ஏதான். அதன்பிறகு விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் எங்களோடு கூட்டணி வைத்தார்கள். எங்கள் தயவால் அதிமுக வெற்றி பெற்றது.
விஜயகாந்த் மட்டுமே கட்சி. அவர் இருக்கின்ற வரையில் கட்சி இருக்கும். முதல் முதலிலே தேமுதிகவைச் சேர்ந்த சுந்தரராஜன் எம்எல்ஏ ஜெயலலிதாவை சந்தித்தப்போதே சொன்னேன், நான் உட்பட மீதமுள்ள 28 எம்எல்ஏக்களும் கட்சியைவிட்டுச் சென்றாலும் தேமுதிகவுக்கு துளியளவுக் கூட, இம்மியளவு கூட பாதிப்பு ஏற்படாது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு கூறினார். 

ad

ad