புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2013

மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு

புதுடெல்லி சென்றுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர், நேற்று மாலை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். 

இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது வடக்கு மாகாணசபைத் தேர்தல், வடக்கு,கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமைகள், இந்தியாவின் உதவித் திட்டங்கள், 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் சிறிலங்கா அரசின் முயற்சிகள் உள்ளிட்ட பரந்துபட்ட விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் எத்தகைய நடவடிக்கைகளிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்ற நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நேற்று முன்தினம் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனையும், நேற்றுமாலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், பொன்.செல்வராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவினர் இன்று மாலை கொழும்பு திரும்பவுள்ளனர்.

அதற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியை சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளை, இந்தச் சந்திப்பை அடுத்து, 13வது திருத்தச்சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்யும் பேச்சுக்களிலோ, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என்று இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ad

ad