புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013

அரசு பேருந்து - டேங்கர் லாரி மோதல்! 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி! Photos

பெரம்பலூர் ரோவர் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்
.nakkeeran

சென்னையில் இருந்து ஒட்டன்சந்திரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, புதன்கிழமை மதியம் 3.50 மணிக்கு பெரம்பலூர் ரோவர் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்பு கட்டையைத் தாண்டியதுடன், சென்னையை நோக்கி சென்ற டேங்கர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. 
இந்த சம்பவத்தில் செல்வம், நவீன்குமார், சாந்தப்பன், சென்னையைச் சேர்ந்த சிவா என்கிற சிவக்குமார் (லாரி டிரைவர்) உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் தியாகராஜன், சென்னையைச் சேர்ந்த பேருந்தின் நடத்துனர் சுரேஷ்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை எஸ்.பி. மகேஷ், மீட்பு பணிகளை மேற்கொண்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இந்த விபத்து குறித்து, அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த துரை என்பவர் கூறுகையில், சென்னையில் இருந்து நாங்கள் 4 பேர் இந்த பேருந்தில் வந்தோம். பேருந்தை டிரைவர் நன்றாகத்தான் ஓட்டி வந்தார். திடீரென பேருந்து தடுப்பு கட்டையை தாண்டி சென்று விபத்து ஏற்பட்டது எப்படி என்று தெரியவில்லை. என்னுடன் வந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார் கண்ணீருடன்.
சம்பவ இடத்திலிருந்து செய்தி, படங்கள்: எஸ்.பி.சேகர்

ad

ad