புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2013

சுவிட்சர்லாந்தில் கடுமையாகும் புகலிடச் சட்டங்கள்

சுவிட்சர்லாந்துக்குள் புகலிடம் தேடி வருவோருக்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் 57 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பை gfs.bern என்ற கருத்துக்கணிப்பு மையம் மூலமாக சுவிஸ் ஒலிபரப்பு அலுவலகம் நடத்தியுள்ளது. இந்த பொது வாக்கெடுப்பு முறைக்கு முடிவெடுக்க தெரியாதவர்களின் எண்ணிக்கை 48 சதவீதம் இருந்து 57 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டாம் என்று கருதியவர்களின் எண்ணிக்கை 29 சதவீதமாகவே தொடர்கிறது. இதில் மாற்றம் எதுவும் காணப்படவில்லை.
அதிகரித்து வரும் புகலிடம் நாடி வருவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்தியக் கூட்டரசும், சுவிஸ் நாடாளுமன்றமும் இந்தச் சட்டங்கள் கடுமையாக்கப்படுவதை ஆதரித்துள்ளன.
மேலும் சட்டங்கள் கடுமையாக்கப்படுவதை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் சுவிட்சர்லாந்தின் புகலிடம் வழங்கும் முறையில் கோளாறுகள் தோன்றும் என்று தெரிவிக்கின்றனர்.

ad

ad