புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2013

வடக்கில் இராணுவ தலைமையகத்தை விரிவாக்க தனியார் நிலங்களை அரசாங்கம் சுவீகரிக்கும்!- காணி அமைச்சர்
வடக்கில் இராணுவ தலைமையகத்தை ஏற்படுத்துவதற்காக பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் இருக்கும் 6 ஆயிர்து 381 ஏக்கர் தனியார் நிலங்களை அரசாங்கம்
கையகப்படுத்த உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு, அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி இழப்பீடுகள் வழங்கப்படும். அபிவிருத்தி மற்றும் தேசிய பாதுகாப்புக்காக அரசாங்கத்திற்கு காணிகள் தேவைப்படுவதாகவும் இதில் வடக்கு, தெற்கு என்று பேதங்கள் கிடையாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தெற்கில் உள்ள மக்களின் பராம்பரிய காணிகளை கூட அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது.

ad

ad