புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2013

அன்புமணி ராமதாஸ் கும்பகோணம் செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுப்பு
பாமகவின் மாநில இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜூன் 7ம்தேதி வெள்ளிக்கிழமையன்று
கும்பகோணம் வருவதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 25 ம் தேதி  மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் பகுதியிலிருந்து ஏராளமான வன்னியர்கள் மகாபலிபுரத்திற்கு சென்றனர்.

அப்போது மரக்காணம் என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ் சேரியைச் சேர்ந்த விவேக் (17) என்பவர் இறந்தார்.  இதையடுத்து பாமகவின் கட்சிநிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு உள்ளிட்டோர்  தேவனாஞ்சேரிக்கு சென்று  விவேக்கின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிவாரண நிதியை வழங்கினர்.
பின்னர் பாமகவினர் மரக்காணம் கலவரத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தினை கடந்த ஏப்ரல் 30 ம் தேதி நடத்தினர். இதில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து மரக்காணம் கலவரம் தொடர்பாக  நியாயம் கேட்டு  சாலை மறியல் ஈடுபட சென்ற  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து டாக்டர் ராமதாஸ் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள   தேவனாஞ்சேரிக்கு செல்ல முடிவு செய்தபோது  தஞ்சை மாவட்டத்தில் அவர்  வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ராமதாஸ் திருச்சியிலிருந்து நேராக திண்டிவனம் சென்றுவிட்டார்.
இந்நிலையில் தேவனாஞ்சேரி விவேக் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க உள்ள பாமகவினர் வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிவாரண உதவியை அளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற  பாட்டாளி மக்கள் கட்சி யின் மாநில இளைஞர் அணிதலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கும்பகோணத்திற்கு ஜூன்(7ம்தேதி)வருவதற்கு கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி. சிலம்பரசனிடம் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் வழக்குரைஞர் ராஜசேகர் அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கும்பகோணம் வந்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்பதால் அவர் கும்பகோணத்திற்கு வருவதற்கு  அனுமதி மறுத்துவிட்டதாக காவல்துறையிடம் இருந்து வியாழக்கிழமை  மாலை வழக்குரைஞர் ராஜசேகருக்கு பதில் தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகை ரத்து செய்யப்பட்டது

ad

ad