புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2013

கீரிமலை, கவுணாவத்தையில் மிருக வேள்வி! 750 கடாக்கள்,300 சேவல்கள் பலியிடப்பட்டன
கீரிமலை கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் எழுநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
அதிகாலையில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளை தொடர்ந்து வைரவருக்கு பொங்கி படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெளி மண்டபத்தில் மாமிசப் படையல் செய்யப்பட்டது.
இதில் முட்டைகள், கள்ளு, கருப்பணி போன்றவற்றுடன் உணவு படைக்கப்பட்டு கடா வெட்டப்பட்டு தலையும் படைக்கப்பட்டது.
தொடாந்து ஏனைய கடாக்கள் வெட்டப்பட்டன.
இன்று இடம்பெற்ற இந்த வேள்வியில் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்டுக்கடாக்கள் அதிகாலையில் உழவு இயந்திரங்கள் மற்றம் லாண்ட் மாஸ்டர்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டன.
இதனை விட சுமார் 300க்கும் மேற்பட்ட சேவல்களும் பலியிடப்பட்டன.
இந்த நிகழ்வில் சுமார் பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad