புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013

சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்தியா கைப்பற்றியது.


ஞாயிறன்று பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டம் மழையின் காரணமாக மிகவும் தாமதமாகவே தொடங்கியது. காலை 10.30
மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் இறுதியாக மாலை 4.20 மணிக்கே தொடங்கும் சூழல் ஏற்பட்டது.
ஆட்டம் மிகவும் தாமதமாகத் தொடங்கியதால் அணிக்கு ஐம்பது ஓவர்களைக் கொண்ட போட்டி ஒவ்வொரு அணியும் இருபது ஓவர்கள் ஆடும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டது.
முதலில் ஆடிய இந்திய அணியினர் தமது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை எடுத்தனர். அதிகபட்சமாக விராட் கோஹ்லி 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் 31 ஓட்டங்களும், ஜடேஜா 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
அணியின் தலைவர் தோனி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியினர் தமது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை எடுத்தனர்.

பந்தை மடக்கி அடிக்கும் இங்கிலாந்து அணியின் இயன் பெல்
இயன் மார்கன் 33 ஓட்டங்களும், ரவி போப்பாரா 30 ஓட்டங்களும் எடுத்து அணிக்கு உதவினாலும் இங்கிலாந்து அணியால் 129 ஓட்டங்கள் என்கிற இலக்கை எட்ட முடியவில்லை.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுப் பணமும் கோப்பையும் வழங்கப்பட்டன. இங்கிலாந்து அணிக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசு கிடைத்தது.

நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக இந்தியாவின் ஷிகார் தவான் தேர்தெடுக்கப்பட்டார்.

ad

ad