புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2013

தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்: எழும்பூரில் பதட்டம் 
சென்னை எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்வதற்காக சென்ற வழக்கறிஞர்களுக்கும்
, போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் காயம் அடைந்தனர். வழக்கறிஞர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையிலும், போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்யக்கோரியும் திங்கள்கிழமை சென்னை எழுப்பூர் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டடு, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறிய-லும் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களின் போராட்டத்தையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் எழும்பூர் பகுதியே பதட்டமாக காணப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

படங்கள்: அசோக்

ad

ad