புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போடுங்கள்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை
மதுரை: அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போட்டால் சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

மதுரையில் நேற்று இரவு ராஜீவ்காந்தி நினைவு தினம் மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தெய்வநாயகம், முன்னாள் எம்.பி. ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:

நம் இளம் தலைவர் ராஜீவ் காந்தியால் தான் இன்று கம்ப்யூட்டரையும், செல்போன்களையும் ஏழை, எளியவர்கள் கூட பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு செய்த திட்டங்களை எல்லாம் தங்கள் திட்டம் என மாநில அரசுகள் சொல்லிக் கொள்வது தான் இவர்களின் சாதனை.
என்னிடம் கூட ஒருவர் கேட்டார். '108 ஆம்புலென்ஸ் திட்டம் கொண்டு வந்தது நாங்கள் தான் என்று உள்ளுர் கரைவேட்டிக்காரர்கள் சொல்கிறார்களே? அது உண்மையா?' என்று. 'மாநில அரசு கொண்டு வந்ததாக இருந்தால், ஒரு பக்கம் தலைவர் படமும், மறு பக்கம் துணை முதல்வர் படமும், இன்னொரு பக்கம் மதுரை வீரன், இன்னொரு பக்கம் கனிமொழியின் படமும் இருந்திருக்குமே? அதேபோல் இன்று ஆட்சியில் இருப்பவர் கொண்டு வந்திருந்தால், வேனையே மறைக்கும் அளவுக்கு முதல்வரின் ராட்சத படம் இடம் பெற்றிருக்குமே? இந்த இரண்டும் இல்லாத போதே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இது மத்திய அரசுத் திட்டம் என்று' எனச் சொன்னேன்.
அம்மா உணவகத்தில், இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், நீங்கள் 1 ரூபாய்க்குப் போடுகின்ற இட்லியை கொஞ்சம் பெரிதாக குஷ்பு இட்லி போல போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். குஷ்பு தி.மு.க.வுக்குப் போய்விட்டதால், இட்லிக்கு குஷ்பு பெயரை வைக்க முடியாது. ஆனால், ‘அந்த’ சைஸில் இட்லி போட்டால், சாப்பிடுகிறவர்கள் சந்தோஷப்படுவார்கள்.

அ.தி.மு.க.வும் வேண்டாம், தி.மு.க.வும் வேண்டாம். காங்கிரஸ் தனித்து நிற்க வேண்டும் என்று இங்கே பேசிய கே.எஸ்.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் சொன்னார்கள். அது தான் என்னுடைய கருத்தும். ஆனால் அதிலே உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

-கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து

ad

ad