புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2013

யுத்தத்தின் எதிரொலி–வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய்!



வடக்கில் வேகமாக பரவும் விபசாரம் ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவீர்கள் ?இளம் பெண்ணின் வாயில் இருந்து வந்த கேள்வி.

வவுனியா பஸ் தரிப்பிடத்தில்…
ஆம் தற்போது வடக்கில் விபச்சாரம் அதிகரித்து வருகின்றது.வீடுகள் விடுதிகள் என்று சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்கி வந்த விபச்சாரம் இப்பொழுது நடமாடும் வியாபாரமாக மாறியுள்ளது.
வவுனியாவில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு தொலைபேசி ஊடாக அழைத்தாலே போதும் அழைத்த இடத்திற்கு அழைத்த நேரத்தில் சமூகம் அளிக்கின்றர்கலாம்.
அதைவிட குறிப்பிட்ட வீதியோரங்களில் சந்திகளில் பஸ்தரிப்பிடங்களில் அவர்களை சந்திக்கமுடியும்.
இலகுவில் அடையாளம் காணமுடியாத அளவுக்கு இவர்களின் நடமாட்டம் இருக்கின்றது.அவசர சேவை இலக்கம் எப்படி அனைவரிடமும் இருக்கின்றதோ அதை போன்று இப்பொழுது இவர்களின் தொலைபேசி இலக்கமும் பொதுவாக அனைவரிடமும் இருக்கின்றது.
இவர்களின் தொலைபேசி இலக்கம் எப்படி காம வெறி கொண்டவர்களின் கைகளுக்கு செல்கின்றதென்று இதுவரை தெரியவில்லை.இந்த விபச்சார தொழில் வடக்கில் வவுனியா,யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஆரம்பித்து தற்போது மன்னாரையும் வந்தடைந்துள்ளது.
தற்போது தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் பரவிக்காணப்படுகின்றது. அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலையில் போரின் பாதிப்புக்களால் கணவனை இழந்து, பாசத்துக்குரிய உறவுகளை இழந்து, அரைவயிறுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் வாழ்வில் எந்தவிதப் பற்றும் இல்லாமல் வாழ்பவர்களே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவ்வாறான தொழில்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.
பெரும்பாலானோர் வறுமையின் காரணமாகவே விபச்சாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அடுத்ததாக போர் நடந்து முடிந்த ஒரு தேசத்தில் அங்கு வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனத்தை அதன் போராட்ட வீச்சைக் குறைப்பதற்கு அந்த நாட்டு அரசுகளால் திட்டமிட்டும் இவ்வாறான செயல்கள் அரங்கேற்றப்படுகினறன.
குறிப்பாக சிங்கள விபச்சாரிகளும் தமிழர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
யுத்தத்தின் முடிவில் அனாதரவாக்கப்பட்ட தமிழ் மகள் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினையே இது.
அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி கொண்டால் மட்டும் போதாது.கொடிய யுத்தத்தில் தமது உறவுகள் அணைத்தினையும் இழந்து ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அலைமோதும் உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.
அரசாங்கம் விட்ட மிகப்பெரிய தவறின் காரணமாகவே இன்று தமிழர் பிரதேசங்களில் விபச்சாரங்கள் அதிகரிக்கின்றது.
சட்டத்தினைப்பாதுகாக்க இருக்கும் பாதுகாப்புத்தரப்பினர் பலரும் இச்செயற்பாட்டிற்கு துனை போகின்றமை அணைவருக்கும் வேதனையளிக்கின்றது.
குறித்த விபச்சார நடவடிக்கைகளுக்கு எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி முட்சக்கர வண்டி ஓட்டுனர்கலே முழுப்பொருப்பாளியாகவும் இருக்கின்றார்கள். தரகராக இருந்தாலும் சரி குறித்த விபச்சார நடவடிக்கையின் முழு பொறுப்பாளிகளும் அவர்களே.
குறித்த மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகள் தமது சுயநலப்போக்கில் இருப்பதன் காரணத்தினாலேயே விபச்சார நடவடிக்கைகள் அதிகரிக்கினறது என்பதினை கூறிக்கொள்வதில் ஆட்சேபனை எதுவுமில்லை.

ad

ad