புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013

ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தமை வருத்தமளிக்கிறது என மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் முடிவு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் நடுவர்களின் முடிவில் ஏமாற்றம் இல்லை. இப்போட்டியில் இரு அணி
வீரர்களும் சிறப்பாக விளையாடினர். போலார்ட் ஆட்டமிழப்பதற்கு முன் மே.இ.தீவுகள் அணி பக்கமே வெற்றி வாய்ப்பு இருந்தது என அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதிக்குள் நுழைவதற்கான முக்கிய போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. மழைகாரணமாக 31 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க 31 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 26.1 ஓவரில் 190 ஓட்டங்களை எடுத்த போது மழை குறுக்கிட, போட்டி 'டக்வேர்த் லூயிஸ் முறையில் சமநிலை அடைந்தது.

இப்போட்டியில் மழை குறுக்கிட்ட நேரத்தில், 'டக்வேர்த்-லூயிஸ்" முறைப்படி மே.இ.தீவுகள் அணியின் வெற்றிக்கு 26.1 ஓவரில் 187 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 26 ஆவது ஓவரின் முதலாவது பந்தில் போலார்ட் ஆட்டமிழந்ததால், 191 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் மே.இ.தீ. அணி 190 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்ததால், போட்டி சமநிலை முடிவுற்றதையடுத்து ஓட்டசராசரி விகிதத்தில் தெ.ஆ. அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையிலேயே டுவைன் பிராவோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ad

ad