புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013

இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இந்திய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை கண்காணிப்பகம், அமெரிக்காவின் நியூயோர்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல சர்வதேச
அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், ஊடகக் கட்டுப்பாட்டு சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறு  ஜனாதிபதி ராஜபக்ச அந்நாட்டு தகவல் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில், இலங்கையில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், அச்சுறுத்தல் காரணமாக 26 பத்திரிகையாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் மிக மோசமான நிலையில் இருப்பதாக பல சர்வதேச அமைப்புகள் விமர்சித்து வருகின்றன என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad