புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2013

கனிமொழிக்கு செல்லாத ஓட்டு : மேல்முறையீடு செய்ய திமுக முடிவு
ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், தலா 2 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம்
ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. இவர்களின் ஓட்டுகளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 23 பேரின் ஓட்டுகளுடன் சேர்த்தால் கனிமொழிக்கு மொத்தம் 32 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், அவர் 31 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கனிமொழிக்கு போடப்பட்ட ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாகிவிட்டது.
இது குறித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.,  ‘’இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. மேல்-சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு 6 கட்சிகளிடம் ஆதரவு கேட்டோம். 3 கட்சிகள் ஆதரவு தந்தன. இந்த தேர்தலில் செல்லாத ஓட்டு பதிவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் நாங்கள் மேல்முறையீடு செய்வோம்’’என்றார்.

ad

ad