புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2013

உத்தரகாண்ட் சம்பவம் : கங்கையில் மிதந்து வரும்
உடல்களுக்கு மரபணு சோதனை நடத்த உ.பி. அரசு உத்தரவு
உத்தரகாண்ட் மாநிலத்தில், கேதர்நாத், பத்ரிநாத், ஹரித்துவார் உள்ளிட்ட புனிதத்தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் பேய் மழை
பெய்தது. இதில் பெரும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கினர்.

இடிபாடுகளில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் கங்கை, யமுனை ஆறுகளில் மிதந்து செல்கின்றன.

உத்தரகாண்டில் மழை, நிலச்சரிவில் சிக்கி பலியான பக்தர்களின் உடல்கள் கங்கையில் மிதக்கின்றன. அந்த உடல்களுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ad

ad