புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2013

கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை -மத்தியஸ்தம் வகிக்க தென்னாபிரிக்கா தயார் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்! தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு
தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இவர் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டத்திற்கு மத்தியஸ்தம் வகிப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். 
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுக்களை ஊக்குவிக்கவும், மத்தியஸ்தம் வகிக்கவும் தென்னாபிரிக்கா விருப்பம் தெரிவித்திருந்தது.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரச தரப்பினரையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் முன்னரும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை தென்னாப்பிரிக்க பிரதிநிதிகள் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் நாளை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வரவுள்ள தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் அரச தரப்பினருடனும் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.
இதேவேளை தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் ஞாயிறன்று நாடு திரும்ப உள்ளதுடன் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

ad

ad