புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2013

நீதிமன்றம் ஜெயலலிதா ஆட்சியின் முகத்தில் கரியை பூசிவிட்டது: மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை கோயம்பேட்டில் திங்கள்கிழமை 17.06.2013 மாலை திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம், நலத்தட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த
திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முறையான அனுமதி பெற்று பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் திடீரென அனுமதி மறுத்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த தடை விதிக்கப்படுவதாக கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுக்கூட்டத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டனர். இரவு 10.30 மணி வரைக்கும் கூட்டம் நடத்த அனுமதி அளித்தனர். 
இதைத்தொடர்ந்து திட்டமிட்டப்படி திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், 
திமுக பொதுக்கூட்டங்கள் மாநாடு போன்று நடைபெறுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் காவல்துறையை பயன்படுத்தி, இந்த நிகழ்ச்சியை தடுக்க ஈடுபட்டார்கள். நாம் முறையான வழியில் நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றம் இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி தந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆட்சியாளர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டது. இன்று நீதிமன்றம் ஜெயல-தா ஆட்சியின் முகத்தில் கரியை பூசியிருக்கிறது. நாளை மக்கள் மன்றம் இந்த ஆட்சியின் முகத்தின் மீது கரியை பூச காத்திருக்கிறது என்றார்.

ad

ad