புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2013

லண்டனில் திருட்டுப்போன நகைகள் மீட்பு! உரிமம் கோருமாறு பிரி. பொலி்ஸ் அறிவிப்பு
லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்)  பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் ஆசிய நாட்டுக்காரர்களின் தங்க மோதிரங்கள் கைச்சங்கிலி மாலைகள், வளையல்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் லண்டன் மாநகரிலிருந்து திருடப்பட்டுள்ளன.

கொலைக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் தலைமையில் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுது கெண்ட் மற்றும் எசெக்ஸ் பகுதிகளிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பல நகைகள் அதாவது 510 000 பவுண்ட் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டன.

லண்டனில் ஆரம்பிக்கப்பட் கைப்பை திருட்டு சம்பவங்களின் தொடர்சியாகவே இவ்வாறு நகைதிருட்டு ஆரம்பிக்கப்பட்டதாக  ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட புலனாய்வு அதிகாரி ஸ்டிவொர்ட் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

இவ்வாறு நகைகளை திருடிய இத்திருடர்கள தங்களுடைய ஓய்வுக்கால வருமானத்திற்காக இந்நகைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்திருப்பார்கள் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் கைப்பற்றப்பட் இந்நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். நீங்கள் உங்களுடைய நகைகளை சரிவர அடையாளம் கண்டிருப்பீர்களாயின் கெண்ட் பொலிஸ்நிலை தொலைபேசி 101 இலக்கத்துடன் தொடர்புக்கொள்ளவும் என்றார்.  
 

ad

ad