புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுமி கொலை: கள்ளக்காதலி தற்கொலை: காதலன் கைது 
தேனி மாவட்டம் போடியில் குமார் என்பவரின் வீட்டின்கீழ் சுரேஷ் என்பவர் தங்க நகை செய்யும் பட்டறை வைத்துள்ளார். சுரேஷ் தனது கடைக்கு
எதிரே உள்ள மணி என்பவரது மனைவி கீதாவுடன், கள்ளத்தொடர்பு தொடர்பு வைத்திருந்தாகவும், அவ்வப்போது பணம், நகைகள் கொடுத்து உதவி வந்தாராம்.

கீதாவின் தோழிகள் 3 பேருடனும் சுரேஷ் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததுடன், அவர்களுக்கும் நகை, பண உதவி செய்துள்ளார். இதனால் ரூபாய் 6 லட்சம் கடனுக்கு ஆளானார் சுரேஷ். வீட்டின் உரிமையாளர் குமாரிடம் ரூபாய் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார் சுரேஷ். கடன் வாங்கி பல மாதங்கள் ஆனதால் குமார், சுரேஷை கடனை திரும்ப கொடுக்குமாறு தொடர்ந்து கேட்டுள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை போடி பகுதியில் மின்வெட்டு இருந்தபோது, சுரேஷ் எதிரே உள்ள கள்ளக்காதலி கீதா வீட்டுக்குச் சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குமாருடைய மகள் சவுந்தர்யா, மகன் விக்னேஷ் ஆகிய இருவரும் கீதா வீட்டுக்கு திடீர் என வந்துள்ளனர். இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்துள்ளனர். 
விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டு குழந்தைகளையும் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது விக்னேஷ் ஓடிவிட்டான். சவுந்தர்யா மாட்டிக்கொண்டாள். சவுந்தர்யாவின் கை, கால்களை கட்டி, நகைக்கு பயன்படுத்தும் சயனைடு கொடுத்துள்ளனர். இதில் சவுந்தர்யா உயிரிந்தாள். குழந்தையின் உடலை வீட்டுக்குள்ளேயே மறைத்துள்ளனர்.
விக்னேஷையும் கொலை செய்ய சுரேஷ் புறப்பட்டுள்ளான். இந்தநிலையில் கீதாவின் கணவர் மணி வீட்டுக்கு வந்துள்ளார். வெளியே சென்ற சுரேஷ் வீட்டுக்குள் வரமுடியாததால், கீதாவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளான். விக்னேஷை கொலை செய்ய வேண்டும். இல்லையென்றால் நமது விஷயம் வெளியே தெரிந்துவிடும். அவனை எப்படியாவது கொன்றுவிடு என்று கூறியுள்ளான்.
 


                                                            சிறுமி உடலை பார்வையிடும் போலீசார்
உடனே கீதா பாயாசம் செய்து, அதில் விஷத்தை கலந்து, குமார் வீட்டுக்கு சென்று, விக்னேஷை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அவன் வேண்டாம் என்று மறுத்துள்ளான். இருப்பினும் வாயில் லேசாக ஊற்றியுள்ளாள்.
விக்னேஷ் சாகமாட்டான் என நினைத்து, மீதி பாசாயத்தை குடித்துள்ளார் கீதா. பின்னர் தனது வீட்டுக்கு செல்லும்போது வாசல்படியிலேயே மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்ட கணவன் மணி, உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால், வரும் வழியிலேயே கீதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் மயக்கம் அடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குமார் வீட்டினர், அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைத்துள்ளனர் மருத்துவர்கள். 
தனது குழந்தை சவுந்தர்யாவை காணவில்லை என்று குமார் தேடியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் அறிந்த போலீஸ் எஸ்.பி. பிரவீண்குமார், சம்பவ இடத்தற்கு விரைந்து விசாரணை நடத்தினார். கீதா குமார் வீட்டிற்கு வந்ததை அறிந்த எஸ்.பி. பிரவீண்குமார் சந்தேகம் அடைந்தார். கீதா வீட்டில் சோதனை நடத்தினார். வீட்டின் ஒரு அறையில் குழந்தை இருப்பதை கண்டுபிடித்தார். அப்போது குழந்தை உயிரிழந்துள்ளதை அறிந்த பெற்றோர் கதறி அழுதனர். 
இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட சுரேஷ் தலைமறைவானான். அவனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் சுரேஷ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 
சக்திவேல்

ad

ad