புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

 

பழநி முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் அந்தரத்தில் நின்றதால், அதில் சென்ற பக்தர்களிடையே பதட்டம் ஏற்பட்டது.


பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்களுக்கு ரோப் கார் சேவை செய்யப்பட்டுள்ளது. இன்று (05.06.2013) காலை 8 மணிக்கு வழக்கம்போல் ரோப்கார் சேவை தொடங்கியது. ரோப் கார் இயங்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்தரத்தில் நின்று விட்டது. 
இதனால் ரோப் காரில் சென்ற பக்தர்கள் பதட்டம் அடைந்தனர். உடனே கோயில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரோப் கார் அந்தரத்தில் நின்றதால், பக்தர்கள் அலறினர். கோயில் ஊழியர்கள் பதட்டம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். 
தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் ரோப்பில் கயிறு கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்டனர். இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது. 
சக்திவேல்

ad

ad