புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

இந்தியாவில் வேறு எங்கும் நடக்காதது; திமுக இயக்கம்தான்
 அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது : மு.க.ஸ்டாலின்

தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கும் விழா
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று நடைபெற்றது.


இளைஞர் அணியின் மாநில துணை அமைப்பாளரும், சென்னை முன்னாள் மேயருமான சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். விழாவில் தி.மு.க. பொருளாளரும், இளைஞர் அணி செயலாளருமான மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1682 சாதனை மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 53 ஆயிரம் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளோடு அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ’’இந்திய அளவில், மாநில அளவில் ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கும், பாதிப்புகளுக்கும், பாதிப்புக்கு ஆளாகும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியையும் தி.மு.க. தொடர்ந்து செய்து வருகிறது. அதுமட்டுமின்றி நலிந்த தொண்டர்களின் குடும்பத்துக்கு நிதி, விபத்தில் பாதிக்கப்பட்ட தொண்டர்களுக்கு மருத்துவ உதவி என பல்வேறு வகையில் தி.மு.க. அறக்கட்டளை உதவி வருகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட உத்தரகாண்ட் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ரூ.25 லட்சத்தை தி.மு.க. வழங்கியது. இதில் எல்லாம் பெருமையோடு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.   எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், பொது நோக்கத்தோடு மக்களின் துன்பங்களை போக்கும் வகையில் அவர்களுக்கு துணை நிற்கும் இயக்கம் தி.மு.க.வாகத்தான் இருக்கும் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல் கிறேன்.
தி.மு.க.வில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், அத்தனையிலும் சிறப்புமிக்கது இளைஞர் அணிதான். கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்த இளைஞர் அணி முதல் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றுதான் மாநில-மாவட்ட அளவில் சாதனை படைக்கும் மாணவ-மாணவிகளுக்கு கருணாநிதி பிறந்த நாளில் பரிசுத்தொகை வழங்குவது.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் மாநில, மாவட்டங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது. அந்த வகையில் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நிதி திரட்டி அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையில் இருந்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2008-09 கல்வியாண்டில் மாநில அளவில் 19 பேரும், மாவட்ட அளவில் 278 பேரும் தேர்வுகளில் சாதனை படைத்து பரிசுகளை பெற்றனர்.
2009-10-ல் மாநில அளவில் 25 பேரும், மாநில அளவில் 348 பேரும், 2010-11ல் மாநில அளவில் 46 பேரும், மாவட்ட அளவில் 477 பேரும் சாதனை படைத்து பரிசுகளை பெற்றனர். 2011-12ம் கல்வியாண்டில் மாநில அளவில் 24 பேரும், மாவட்ட அளவில் 429 பேரும் பரிசுகளை பெற்றுள்ளனர். இந்த 4 ஆண்டுகளில் 1646 பேர் பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு 97 லட்ச ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
2012-13ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் 211 பேரும், மாவட்ட அளவில் 1471 பேரும் என மொத்தம் 1682 பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு ரூ.1 கோடியே 53 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளின் இந்த சாதனைக்கு காரணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி போராடி அறிமுகப் படுத்திய சமச்சீர் கல்வி திட்டம்தான்.
இந்த திட்டம்தான் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை மாணவ சமுதாயம் எண்ணி பார்க்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் தான் எதிர்கால சமுதாயத்தை உருவாக் கக் கூடியவர்கள். அடுத்த ஆண்டு இளைஞர் அணி அறக்கட்டளை பரிசு பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்க அறக்கட்டளைக்கு நிதி திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
ஆட்சியாளர்கள் கூட மாநில அளவில் சாதனை படைத்தவர்களுக்குதான் பரிசுகள் வழங்கி உள்ளனர். ஆனால் ஒரு கட்சி சார்பில் மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்த அத்தனை பேருக்கும் பரிசுகள் வழங்கியது இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத நிகழ்வாகும். தமிழகத்தில் தி.மு.க. இயக்கம்தான் அந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது’’என்று தெரிவித்தார்.

ad

ad