புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013

அத்வானி ராஜினாமாவை பா.ஜனதா பாராளுமன்றக்குழு நிராகரித்தது
பா.ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடியை நியமித்ததால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் அத்வானி,
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

அதனை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்கவில்லை. அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமாதானம் செய்தார். மோடியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்நிலையில், பா.ஜனதா கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று மாலை ராஜ்நாத் சிங் வீட்டில் நடைபெற்றது. அத்வானி ராஜினாமா செய்ததையடுத்து எழுந்துள்ள சூழல் குறித்து மூத்த தலைவர்கள் விவாதித்தனர். இக்கூட்டத்தில் அத்வானியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

எந்த நிலையிலும் அத்வானியின் ராஜினாமாவை நான் ஏற்கமாட்டேன். அவரது ராஜினாமாவை கட்சியின் பாராளுமன்றக் குழுவும் ஒருமனதாக நிராகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டையும் கட்சியையும் அத்வானி தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad