புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013

தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பின் முழு விபரம
 


கோவையைச்சேர்ந்த நஷ்ரின்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரது கணவர் மீரான். (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . 
மீரான் செறுப்பு வியாபாரி. கடந்த 1994ல் இவர்களுக்கு இஸ்லாம் மதம் முறைப்படி திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.  இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் 1999ல் மனைவி பிள்ளைகளை விட்டு மீரான் பிரிந்து சென்று விட்டார்.

   இதையடுத்து தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழ ஊர் பெரியவர்கள் எடுத்த முயற்சி வீணாய்ப்போனது.  இதையடுத்து ஜீவனாம்சம் கேட்டு நஷ்ரின்  குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கின் ஆவணமாக புகைப் படங்கள், குழந்தைகளின் கல்வி சான்று, பிறப்பு சான்று, மீரானுக்கு பிள்ளைகள் எழுதிய கடிதங்கள் போன்றவற்றை நஷ்ரின் கோர்ட்டில் ஆதாரமாக கொடுத்திருந்தார்.


மீரானுடைய  செறுப்பு குடோனில் பணியாற்றியபோது நட்பு ஏற்பட்டு, அது திருமணம் வரையில் வந்ததாக நஷ்ரின் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.   இரண்டாவது குழந்தையின் பிறப்பு சான்றில் தந்தை பெயர் மீரான், தாய் பெயர் நஷ்ரின் என்று குறிப்பிட்டுள்ளதையும் டாக்டர் ஒருவர் சாட்சியம் அளித்தார். 
இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட் குழந்தைகள் இருவரும் மீரானுக்கு பிறந்தவையே அதனால் பராமரிப்பு செலவாக தலா ரூ 500 மாதந்தோறும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.   இந்த உத்தரவு 2006ம் ஆண்டு  பிறப்பிக்கப்பட்டது.  அதே சமயம் மீரானை நஷ்ரின் திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் கோர்ட்டில் கொடுக்கப்படவில்லைஎன்பதை காரணம் காட்டி நஷ்ரின் கேட்ட அவருக்கான பராமரிப்பு தொகையை வழங்கும்படிமீரானுக்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது கோர்ட்.
இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நஷ்ரின் மறு ஆய்வு மனு செய்தார்.  மனுவை நீதிமான் சி.எஸ்.கர்ணன் விசாரித்து தீர்ப்பளித்தார்.   அதன் விபரம் :  ‘’தன்னுடைய உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமூகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்பநல கோர்ட் கணக்கில் கொள்ளவில்லை.   இந்த இரண்டு குழந்தைகளும் மீரானுக்கு தவறான முறையில் பிறந்தவை என்று குடும்பநல கோர்ட் கூறியிருக்கிறது. 

குழந்தை பிறப்பின்போது தம்பதியரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புகை பெறுவார்கள்.  அந்த ஒப்புகை ஆவணத்தில் தம்பதியர் இருவருமே கையெழுத்து போட்டிருப்பார்கள்.  அப்படி இருவருமே கையெழுத்து போட்டிருக்கும்போது அது முறையற்ற பிறப்பால் வந்த குழந்தை என்று கூற முடியாது.  திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயத்திற்காகவும், சடங்குகளுக்காகவும் சுற்றுப்புறங்களுக்காகவும் மட்டும்தான்.   ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அது கட்டாயமல்ல.  இந்த வழக்கை பொறுத்தவரை மீரானும் நஷ்ரினும் சுய அடையாளம் கொண்ட தம்பதியர் என்றே இந்த கோர்ட் கருதுகிறது.

எனவே அவருக்கு பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான்.   ஒரு பெண்ணுக்கு 18வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பி அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்வதன் மூலம் அந்தப்பெண் கருத்தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும், அவன் கணவன் என்றும் கருதப்படவேண்டும் என்பது இந்த கோர்ட்டின் கருத்து. ஏற்கனவே அவர்களுக்கு திருமணம் ஆகாத நிலையிலும் இது பொருந்தும். ஒரு வேளை அவள் கருத்தரிக்காமல் போனாலும் அவர்களுக்குள் பாலியல் உறவு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால் அவர்கள் இருவருமே கணவன் மனைவி உறவுக்கு உட்பட்டவர்களே.  இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சட்டபூர்வமாக மனைவியிடம் இருந்து கோர்ட் மூலம் டைவர்ஸ் பெற்ற பின்னரே வேறொரு பெண்ணை கணவன் திருமணம் செய்ய முடியும்.  சட்டபூர்வமான வயதை அடைந்த ஆண்-பெண் இருவர் பாலியல் உறவுகளை வைத்துக்கொண்டால் அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும், அவர்கள் இருவரை கணவன் மனைவி என்றும் கருத முடியும்.  ஏற்கனவே திருமணம் ஆகாதவர்களூக்கும் இது பொருந்தும்.
தாலி கட்டுவது, அம்மி மிதித்து வலம் வருவது , அக்னி சுற்றுவது, மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது , பதிவு திருமணம் செய்துகொள்வது போன்றவை எல்லாம் மத சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்து வதற்காகத்தான் செய்யப்படுகிறது.   இப்படி சடங்குகளை மையப் படுத்தி அல்லது பின்பற்றி திருமணம் செய்துகொண்டாலும் அவர்களுக்குள் பாலியல் உறவு இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது.

ஒரு திருமணம் ஆகப்பட்டதின் சட்டப்பூர்வமான ஆதாரம் எதுவென்றால் அந்த தம்பதியருக்குள் உள்ள பாலியல் உறவுதான்.  மீரான் நஷ்ரின் வழக்கை பொறுத்தவரை அவர்களுக்குள் அப்படிப்பட்ட உறவு நடந்தேறியுள்ளது.   எனவே, இவர்களுக்கு இடையே இருந்த இப்படிப்பட்ட உறவுக்கான ஆதாரங்களை குடும்ப நல கோர்ட்டில் தாக்கல் செய்து திருமணம் நடந்தை அவர்கள் நிரூபிக்கலாம். அதன் பின்னர் மீரான் தான் தன் கணவர் என்று, இருக்கிற அத்தனை அரசு ஆவணங்களிலும் நஷ்ரின் சட்டப்படி பதிவு செய்து கொள்ளலாம் .  

முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்த தம்பதியருக்கு எந்த மாதிரியான சட்ட உரிமைகள் இருக்கிறதோ, சட்ட சலுகைகள் இருக்கிறதோ,  அத்தனையையும் நஷ்ரின் பெறமுடியும்.   இது மாதிரியான திருமணம் சடங்குகள் முடிந்து இல்லற உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும்.  இந்த விவகாரத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்காமலே தாம்பத்திய உறவு நடந்திருக்கிறது.   ஆகவே, இதுவும் திருமணம்தான்.  இதுவும் செல்லுபடியாகக்கூடிய ஒன்றுதான்.   எனவே, நஷின் கேட்ட அவருக்கான பராமரிப்பு தொகையை மாதம் ரூ500 என்று மீரான் வழங்க வேண்டும்.  2 ம் ஆண்டு செப்டம்பரில் நஷ்ரின் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த கணக்கின் படி கணக்கிட்டுப்பார்த்து மொத்த தொகையையும் 3 மாதங்களுக்குள் மீரான் வழங்க வேண்டும்.  இவ்வாறு நீதிமான் சி.எஸ்.கர்ணன் தீர்ப்பு கூறினார்.

ad

ad