புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2013

ஆபத்தானோர் பட்டியலில் இணைப்பு! பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு இலங்கை எதிர்ப்பு
பிரித்தானியாவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இலங்கைப் பிரஜைகளை ஆபத்தானோர் பட்டியலில் பிரித்தானிய குடிவரவுத் திணைக்களம் இணைத்துள்ளமை அதிருப்தி அளிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடாபில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீங்கிற்கும், வெளிவிவகார அமைச்சிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா விண்ணப்பம் செய்யும் போது 3000 ஸ்ரேலிங் பவுணட்கள் பிணையாக அறவீடு செய்யும் திட்டத்திற்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், கானா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளிடம் இவ்வாறு பிணைப் பணத்தை அறவீடு செய்ய உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
அதிக ஆபத்தான விண்ணப்பதாரிகளிடமிருந்து மட்டுமே இவ்வாறு பிணைப் பணம் அறவீடு செய்யப்படும் என உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
அதிக ஆபத்தான பிரஜைகள் என்ற வகையீட்டை நீக்குமாறும் இலங்கை கோரவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad