புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2013

எந்த ஐரோப்பியரும் இனிப் பிரான்சில் தப்ப இயலாது!!!

உதாரணத்திற்கு ஜேர்மனியில் இருந்து வரும் வாகனம் பிரான்சில் வேக மீறலைச் செய்து ரடார் பதிவு செய்திருக்குமாயின் பிரான்ஸ் அந்தத் தகவலை ஜேர்மனிக்கு அனுப்பும். ஜேர்மன் காவற்துறை அந்த வாகன ஓட்டுநருக்கான குற்றப்பணச் சீட்டை அனுப்பும். பிரான்சில் அவர் தண்டிக்கப்படாவிட்டாலும் கூட அவர் அவரது நாட்டில் இலத்திரனியல் போக்குவரத்துத் தரவுகள் பரிமாற்றல் மூலம் தண்டிக்கப்படுவார். இந்த நடைமுறை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் அமலுக்கு வருகின்றது.
வீதி விபத்துச் சாவுகளின் 75 சதவீதம் வகிக்கும் முக்கிய நான்கு காரணிகளான வேகக் கட்டுப்பாட்டு மீறல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், சிவப்பு விளக்கை மீறுதல், மற்றும் பாதுகாப்புப் பட்டி அணியாமை என்பவையே மிகத் தீவிரமான தகவற் பரிமாற்றத்தில் பதிவு செய்யப்பட்டு மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படும். அத்தோடு போதைப்பொருள் உபயோகித்து வாகனம் செலுத்ததல், தலைக்கவசம் அணியாமல் உந்துருளி செலுத்துதல், நெடுஞ்சாலையின் அவசர ஆபத்துப் பாதையில் சட்டவிரோதமாக வானம் செலுத்துதல் அல்லது உபயோகப்படுத்தல் (bande d’arrêt d’urgence) மற்றும் வாகனம் செலுத்தும் போது செல்பேசியைக் கையில் வைத்து உரையாடல் என்பனவும் ஐரோப்பிய அளவில் தண்டிக்கப்பட உள்ளன.
விகிதாசார அடிப்படையில் பிரான்சில் கிட்டத்தட்ட 5சத வீதமான வெளிநாட்டு வாகனங்கள் ஓடுகையில் 15 சதவீதமான வேகக் கட்டுப்பாட்டு மீறல்கள் அவர்களாலேயே மீறப்படுகின்றது.
ஜரோப்பிய ஒன்றிய வீதிவிபத்துக்களின் எண்ணிக்கையின் தரவுகள்  இப்படியான சட்ட மாற்றத்திற்கு ஐரோப்பிய நாடுகளைத் தள்ளி இருக்கும். 2009 ஆம் ஆண்டின் புள்ளி விபரத் தரவின் படி ஜரோப்பிய ஒன்றியத்தின் வீதிவிபத்துக்களில் முப்பத்தி ஐந்தாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு உயிரிழப்பு விபத்துக்களிற்கும் 4 பேர் நிலையான அங்கவீனர்கள் ஆகின்றனர் (முக்கியமாக தலை மற்றும் மூளை, முள்ளந்தண்டுக் காயங்களால்). 10 பேர் பலத்த காயத்திற்கு உள்ளாகின்றனர். 40 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகின்றனர்.
இதற்காகவே இந்தப் புதிய சட்டம் நடைமுறைப்படுத்ப்படுகின்றது. இது உடனடிப் பெறுபேறுகளைத் தராவிடினும் மூன்று வருடங்களிற்குள் விபத்துக்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் என நம்பப்படுகின்றது.

ad

ad