புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2013

டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி?
டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது
. இரு கட்சிகளுக்கும் தலா 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய இரு கட்சிகளும் கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற வேண்டும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கனிமொழியை மீண்டும் எம்.பி.யாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. காங்கிரசில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுவரை யாரும் காங்கிரசிடம் ஆதரவு கேட்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.
ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் 90-வது பிறந்த நாள் கொண்டாடிய கருணாநிதிக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. காங்கிரசின் ஆதரவை பெற்றாலும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
8 எம்.எல்.ஏக்களை கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. வேட்பு மனுதாக்கல் இறுதி நாளான 17-ந் தேதி காலையில் அந்த கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
தே.மு.தி.க. அல்லது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவை பெற்று விடலாம் என்று தி.மு.க. கணக்கு போடுகிறது. எனவே தி.மு.க. சார்பில் கனிமொழி மீண்டும் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார் என்று தி.மு.க. வட்டாரம் நம்பிக்கையில் உள்ளது.
ராஜ்யசபா தேர்தல்.. அதிமுகவின் 5வது வேட்பாளர்… பீதியில் தேமுதிக!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக 5வது வேட்பாளரை நிறுத்தியிருப்பதால் மேலும் பல தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்கு தாவி போட்டி தேமுதிக உருவாகக் கூடிய ஒரு நிலை உருவாகியிருப்பதால் அக்கட்சி தலைமை பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க இம்மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 151 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் அதிமுக 5 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதிமுகவுக்கான பலத்தின் அடிப்படையில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவது உறுதியானது. எஞ்சிய சபாநாயகர் உட்பட அதிமுகவுக்கு 15 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கின்றனர். இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அதிமுகவின் 5வது வேட்பாளருக்கு அவசியமாகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அணியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதேபோல் பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். இவர்கள் போக மேலும் 14 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
இந்த 14 பேரில் ஏற்கெனவே அதிமுக ஆதரவு தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இருப்பதால் அவர்கள் அதிமுக வேட்பாளரை ஆதரிக்கலாம். இந்த 6 பேரும் போக மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிமுகவுக்கு தேவை.
சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 8 எம்.எல்.ஏக்கள் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு வாக்களிக்க வைக்க வேண்டும்.
அப்படி மேலும் 8 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ‘பகிரங்கமாக’ அதிமுக ஆதரவு அதிருப்தி அணிக்குத் தாவினால் போட்டி தேமுதிக உதயமாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்.
மேலும் 6வது இடம் யாருக்கு என்பதில் தொடர்ந்தும் குழப்பம் நீடித்தே வருகிறது. தேமுதிக அல்லது திமுக ஏதாவது ஒரு முடிவை அறிவிக்கும் பட்சத்தில் அடுத்த பரபரப்பு உருவாகும்.

ad

ad