புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2013

அத்வானி சமரசம் ராஜினாமாவை வாபஸ் பெற முடிவு ; அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும் பா.ஜ.க

இது, பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க.வுக்கு கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது. ஆனால், அத்வானியின் ராஜினாமாவை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையடுத்து நேற்றிரவு பா.ஜ.க. பாராளுமன்றக் குழு அவசரம், அவசரமாக கூடியது. அந்த கூட்டத்தில் அத்வானியின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் உடனடியாக அத்வானிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பிறகு அத்வானியை ராஜ்நாத்சிங், சுஷ்மாசுவராஜ், அனந்த குமார், வெங்கய்யா நாயுடு ஆகியோர் தொடர்பு கொண்டு சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். நேற்று இரவு நீண்ட நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் இன்று 2-வது நாளாக அத்வானியை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அத்வானி சமரசம் ஆகி தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
அத்வானியிடம் நடந்த சமரச பேச்சுவார்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
நரேந்திர மோடி விவகாரத்தில் அத்வானி சமரசம் ஆகிவிட்டார். ராஜினாமாவை நிராகரிப்பதாக பாராளுமன்றக் குழு எடுத்த முடிவை ஏற்றுக்கொண்டார். ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்றுக்கொண்டார். பா.ஜனதா குறித்த அத்வானியின் கவலைகள் தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் முடிவை மதிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறிய ஆலோசனையையும் அத்வானி ஏற்றுக்கொண்டார். ராஜினாமாவை திரும்ப பெறும் அத்வானியின் முடிவினை நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

ad

ad