புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2013

www.pungudutivuswiss.com
www.madathuveli.net
www.madathuvelimurugan.blogspot.com
யா/புங்குடுதீவு மடத்துவௌி பாலசுப்பிரமணியா் கோவில் -   

ஆரம்ப காலத்தில் நாச்சியார் கோவில் என்று அழைக்கப்பட்டது. புங்குடுதீவினுள் நுழைந்ததும் முதலில் வரும் கிராமம் மடத்துவௌி. இக்கிராமத்தினுள் நுழைந்ததும் பிரதான வீதியின் வலது புறம் நெடுகிலும் பச்சைப் பசேலென்ற நெல் வயல்களின் நடுவே கிழக்கு நோக்கி
சிங்காரமாய் கோலோச்சும் முருகப் பெருமானின் அழகுமிகு திருத்தலம் காட்சியளிக்கும். கம்பீரமாய் எழுந்து நிற்கும் சிற்பத்தேர் முட்டியின் பின்னே பனங்கூடலின் பிண்ணனியில் அருள் புரியும் ஶ்ரீ பாலசுப்பிரமணியா் எழுந்தருளி இருக்கிறார். இளந்தாரி நாச்சிமார் கோவில் னெடற தொனடமைப் பெயரை கொண்ட இவ்வாலயம் சுமார் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நானூறு ஆண்டுகளுக்கு முன்னே வள்ளி நாச்சியார் அயல் கிராமத்தில் இருந்து மடத்துவௌி கிராமத்தைச் சோ்ந்தவரை திருமணம் செய்தார். மணமகளான நாச்சியார் மணமகன் வீட்டில் மூன்று நாள் தங்கி வழமைப்படி இருந்தார். மூன்றாம் நாள் காலை நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளா் நீா் புகுந்த வீடு எம்மோடு சோ்ந்து வாழும் தகுதி அற்றது என்று ஏளனம் செய்தார்

இதைக் கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலியை கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டு தனது பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டார். இதனைக் கண்ட இவரது கணவா் அன்று முதல் அதே இடத்தில் அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார் அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என இப்போது அழைக்கப்படுகின்றது. மடத்துவௌி நாச்சிமார் கோவிலின் தெற்கில் ஒரு அரசமரம் நின்றது அங்கே ஒரு பாம்பு ஒன்று வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த அரசமரத்தின் வேரானது நீளமாக பக்கத்தில் இருந்த சுண்ணாம்பினால் ஆன கோயில் சுவரில் பாம்பு வாழ்ந்த ஓட்டையினருகே ஒரு மனித கை கால் உருவில் வோ் படா்ந்திருந்ததாகவும் மக்கள் இந்த அதிசயத்தை பார்க்க மக்கள் கூடத்தொடங்கியதும் அக்கிராமத்தைச் சோ்ந்த பூரணம் என்ற வயோதிப மாது இந்த வேரை முறித்துக் கொண்டு போய் தன் வீட்டுக் கூரைமேல் எறிந்து விட அவ்வீடு அன்றிரவு எரிந்து சாம்பலானதாக வரலாறு கூறுகிறது.

இவ்வாலயம் 1960 ஆண்டு காலத்தில் புனரமைக்கப்பட்டு அதன் உரிமையாளராக திரு வேலுப்பிள்ளை சபாபதி இருந்து வந்தார். இக்காலத்தில் இவ்வாலயத்திலிருந்த பொருட்கள் திருட்டு போய்விட்டது இதனால் கோபம் கொண்டசபாபதியார் தனக்கு திருடனைக்காட்ட வேண்டும் அதுவரை நான் ஆலயத்தை திறக்கவும் மாட்டேன், விளக்கு வைக்கவும் மாட்டேன் என்று ஆலயத்தைப் பூட்டிச் சென்று விட்டார். அதிகாலையில் பார்க்கும் போது ஆவய முற்றலில் திருட்டுப்போன பொருட்கள் அத்தனையும் ஆலய முற்றலில் வைக்கப்பட்டு கற்பூரம் கொழுத்தி இருக்கப்பட்டது. அதன் பின்னா் ஆலயம் திறக்கப்பட்டு விளக்கு வைக்கப்பட்டது. இவரது வறுமை காரணமாக தொடர்ந்து இவ்வாலயத்தை வர்த்தகர் வி.அருணாச்சலம் பொறுப்பேற்ற பின்னா் முற்று முழுதாக ஆலயம் புனரமைக்கப்பட்டது. மூலஸ்தானத்தின் உள்ளே வேலாயுதமும் வடமேற்கு மூலையில் நாச்சியாரின் விக்கிரகமும் பிரதிஸ்டை செய்யப்பட்டு ஆலயத்தின் பெயரும் பாலசுப்பிரமணியா் கோவில் என்றும் மாற்றப்பட்டது. சின்ன நல்லூா் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் நல்லூா் ஆலயம் போன்றே சரியான நேரத்தில் பூஜை நடைபெற்று வருகின்றது. அத்தோடு இவ்வாலயத்தின் திருவிழாக்கள் மிக கட்டுப்பாட்டுடன் முறையான சைவ விதிமுறைக்கு ஏற்ப நடைபெறுவது வழக்கம். திருவிழா தினமும் பகலும் இரவும் பன்னிரண்டு மணிக்ேக முற்றாக முடிவுறும் அத்தோடு சமய கொள்கைகளுக்கு உட்படாத சினிமா பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகள் கேளிக்ைக வேடிக்கை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்ட நிலையிலேயே திருவிழா நடைபெறும். திரு.வி.அருணாச்சலத்தை தொடா்ந்து வா்த்தகா் வி.இராமநாதன் பொறுப்பேற்றார், இவரது முயற்சியில் இவ்வாலயத்தில் எழுபதுகளின் ஆரம்பத்தில் புங்குடுதீலிலேயே முதன் முதலாக முற்றிலும் சித்திர வேலைப்பாட்டில் முடி வரை அமையப்பெற்ற நல்லூா் ஆலயத் தேரை ஒத்ததான சித்திரத் தோ் வீதியுலா வந்த பெருமை பெற்றது. பிரபல வா்த்தகா் அ.மாணிக்கம் மனைவியின் நினைவாக ஒரு அன்னதான மண்டபத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.




திருவிழாக் காலத்தில் இங்கே அன்னதானம் நடைபெறும். இந்தப் பணியை சிறப்பாக மடத்துவௌி சனசமூக நிலையத்தினா் தொடா்ந்து செய்து வந்தனா். 1987 முதல் இந்த அன்னதான பணியை அமுதகலசம் என்னும் நாமமிட்டு தமது சொந்த பொறுப்பில் நடத்தி சிறப்பித்தனா். வா்த்தகா் பா.பாலசுந்தரம் தாகசாந்தி நிலையத்தை திருவிழாக் காலங்களில் நடாத்தி வருகிறார். இவ்வாலயத்தின் கொடியேற்றம், தோ்த்திருவிழா, சித்திரத்தேரோட்டம், தீா்த்தம், பூங்காவனம் உட்பட சிறப்பான வெகுவிமரிசையாக நடைபெறும் மேலும் சூரன்போர் வாழை வெட்டு, கந்தசஷ்டி, திருவெம்பாவை போன்ற விழாக்களும் மிக சிறப்பானதாக இருக்கும். திருவெம்பாவை அதிகாலை 4 மணிக்கு ஆரம்ப மணியோசையுடன் தொடக்கி திருப்பள்ளியெழுச்சி பாடி துயில் எழுப்புதல் மங்கள வாத்தியக்கச்சேரி, கூட்டு வழிபாடு என வரிசையாகநடைபெற்று காலை ஆறரைக்கு முடிவுறுதல் வரலாற்றுப்பதிவாகும். இதே காலத்தில் கூட்டு வழிபாட்டு மன்றத்தினா் அதிகாலையிலேயே சங்கு, சேமக்கலம் சகிதம் கிராமந்தோறும் பள்ளி எழுப்பும் தொன்மை வாய்ந்த நிகழ்வை மேற்கொள்வா். இவ்வாலயத்தின்ச கூட்டு வழுபாட்டு மன்றம் தீவுப்பகுதியில் மிக சிறப்பு பெற்றது. இந்தப் பணியை பொறுப்பாக நான்கு தசாப்தமாக நடத்தி வந்த பெருமை உள்ளோர் வர்த்தகரான கந்தையா அம்பலசானரையே சாரும். மிகவும் தரமான சீரான கூட்டு வழிபாட்டு முறையை திறம்பட நடத்தி வந்தனர். 1991 காலப்பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது. பின்னா் சோ.சிவலிங்கம் தலைவராகவும் கு.கிருபானந்தன் செயலாளராகவும் கி.சவுந்தரநாயகி பொருளாளராகவும் கொண்ட புதிய பரிபாலன சபையும் உருவாகியது. பின் வந்த காலங்களில் தம்பிப்பிள்ளை என்பவா் தானே தனித்து ஆலயத்தை துப்பரவு செய்து தினமும் விளக்கேற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 2002 முதல் மீண்டும் நித்திய நைவேத்திய கிரியைகள் நடைபெற்று வருகின்றன. அண்மைக்காலமாக இந்த ஆலயத்தினை மீள்நிர்மானம் செய்து ராஜகோபுரத்தினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் வி.இராமநாதன் அவர்கள் முருகனடி சேர்ந்தமை துரதிஷ்டமானது. பொதுச்சேவையில் வரலாறுகளை பதிக்கும் மடத்துவௌி இளையா் மீண்டும் 2012 புதிய நிர்வாகத்தில் பங்குனி மாதம் நடைபெற்ற புதிய நிர்வாகத்தில் புதிய தலைவராக அ.சண்முகநாதனும், செயலாளா் க.சதீஸ்வரன், பொருளாளா் ந.பசிதரன் தெரிவு செய்யப்பட்டமை முருகன் ஆலயத்தின் மறுமலா்ச்சிக்கெனலாம். உலகெங்கும் பரவிவாழும் மடத்துவௌி இளம் தலைமுறையினரால் இனிவரும்காலங்களில் இவ்வாலயம் மேலும் சிறப்பு பெறும் என நம்புவோமாக!

ad

ad