புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2013

தனித் தமிழீழத்துக்காக சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்தவேண்டும்- ஜெயலலிதா
இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை நீர்த்து போக செய்யவோ, அல்லது ரத்து செய்ய வழிவகை செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இறுதி கட்ட போரில் பலரை
ராணுவம் கொன்று குவித்த பின்பும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது என இதற்கு முன்பு தங்களுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
இலங்கையில் இன்னும் தமிழர்கள் மீதான கொடுமைகள் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்கு சிங்களர்களுக்கு இணையான சமஉரிமை அந்தஸ்து, வழங்குவதற்கான அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை. மேலும் தன்னாட்சி உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளும் மாற்றம் செய்யும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27-ந்தேதி தமிழக சட்டசபையில் தனி தமிழ் ஈழம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி ஈழம் குறித்து உலக தமிழர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். இதையே தான் இலங்கை தமிழர்களும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் இலங்கையின் அரசியல் சட்டம் 13-வது சட்ட திருத்தம் கவலைக்குரியதாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் 13-வது சட்டத்தை திருத்த வலியுறுத்தி சிங்கள தீவிரவாதிகள் போராட்டம் நடத்தினார்கள்.
எனவே, அந்த சட்டத்தை திருத்த பாராளுமன்ற தேர்வு குழுவுக்கு அதிபர் ராஜபக்சே அனுப்பியுள்ளார். வருகிற செப்டம்பரில் வடக்கு மாகாணத்தில் கவுன் சில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் இலங்கை ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே இந்த சட்டத்தை திருத்த வேண்டும் என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை பொருளாதார வளர்ச்சி மந்திரி பசில் ராஜபக்சே வெளியுறவு மந்திரியை சந்தித்து பேசினார். அப்போது சட்ட திருத்தம் செய்வதை நியாயப்படுத்தினார்.
1987-ம் ஆண்டு உருவான இந்தோ-இலங்கை ஒப்பந்தத் தின்படி 13-வது சட்டப்பிரிவு உருவானது. அதன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை, பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றும் இந்த 13-வது சட்டபிரிவில் உள்ளது. ஆனால், ஜனதா விமுகதி பெரமுனா கட்சியின் வழக்கின் மூலம் 2007-ம் ஆண்டு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு அரசின் இந்த முடிவை ரத்து செய்தது. அதனால் 2 மாகாணங்களும் இணைக்கப்படவில்லை. இதுவே இந்தோ-இலங்கை ஒப்பந்தத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் மெஜாரிட்டியான தமிழர்களின் வாழ்வு மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அது 13-வது சட்ட பிரிவினால் மட்டுமே முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்குவதில் இலங்கை அரசு விதிவிலக்காக உள்ளது. எனவே, இலங்கையின் சட்ட பிரிவில் திருத்தம் கொண்டு வராமல் தடுக்க மத்திய அரசு அனைத்து வகையான நடவடிக்கையும், நெருக்கடிகளையும் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ad

ad