புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற 16 வயது யுவதி கைது
சிறையில் தண்டனை அனுபவித்து வரும், பாதாள உலக குழுத் தலைவரான பொட்ட நவ்பர் எனக் கூறி, புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, லட்சக்கணக்கில் பணத்தை கப்பமாக பெற்று வந்த திட்டமிட்டு செயற்படும் குழுவொன்று
பற்றிய தகவல்களை கண்டறிந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், குழுவுடன் சம்பந்தப்பட்ட யுவதி ஒருவரை கைது செய்துள்ளனர்.
வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்புக் கொள்ளும் இந்த குழுவினர், குடும்பத்துடன் கொலை செய்ய போவதாக அச்சுறுத்தி இவ்வாறு கப்பத்தை பெற்று வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டு, வெலிகடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று கைதிகள், இந்த குழுவை வழி நடத்தி வந்துள்ளனர்.
சுமார் 7 மாதங்களாக இந்த குழுவினர், புறக்கோட்டையில் உள்ள தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களை அச்சுறுத்தி இவ்வாறு லட்சக்கணக்கான ரூபா பணத்தை கப்பமாக பெற்றுள்ளனர்.
பொட்ட நவ்பர் மீது வர்த்தகர்களுக்கு இருந்த பயம் காரணமாக, வர்த்தர்கள் எவரும் இது பற்றி, பொலிஸில் முறைப்பாடு செய்யாது, பணத்தை கொடுத்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் புறக்கோட்டை வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், குழுவுடன் சம்பந்தப்பட்ட 16வயது யுவதி ஒருவரை காலி, உடுகம பிரதேசத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் சிறையில் உள்ள தனது காதலரின் ஆலோசனைக்கு அமைய இந்த குழுவில் இணைந்து செய்யப்பட்டதாக விசாரணையின் போது, கூறியுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒருவரே இந்த பெண்ணின் காதலர் எனக் கூறப்படுகிறது.
சிறையில் இருக்கும் மரண தண்டனை கைதிகள், வர்த்தர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடுகமவில் இருக்கும் யுவதியின் வங்கி கணக்கில் பணத்தை வைப்பிடுமாறு அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இவ்வாறு வங்கியில் வைப்பிலிடப்படும் பணத்தில் ஒரு பகுதியை தனது செலவுக்காக எடுத்து கொள்ளும், அந்த யுவதி, மீதி பணத்தை கப்பம் பெறும் குழுவின் தலைவரான தனது காதலருக்கு வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ad

ad