புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2013


இன்று அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற தனியார் மினி பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி முகாமையாளர்களுக்கான செயலமர்வொன்றை முடித்து விட்டு நேற்றிரவு மட்டக்களப்பு திரும்பிக் கொண்டிருந்த போது இவர்கள் பயணித்த தனியார் மினி பஸ் வண்டி இன்று அதிகாலை 3மணியளவில் மன்னம்பிட்டியில் வைத்து மரமொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பயணித்த 21 சமுர்த்தி முகாமையாளர்களில் மூன்று சமுர்த்தி முகாமையாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பஸ்வண்டியின் சாரதி நடாத்துனர் அடங்களாக 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மன்னம்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மன்னம்பிட்டி மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிலருக்கு சிறிய காயங்கள் எனவும் சிலருக்கு படுகாயங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் வான் ஒன்று பொலநறுவைப் பகுதியில் விபத்திற்குள்ளானதில் சாரதி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர்கள் வரையிலானோர்கள் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எஸ்.மனோகிதராஜ் தெரிவித்தார்.
இச்சம்பவம்  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் மன்னம்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மேற்படி உத்தியோகஸ்தர்களே இவ் விபத்தில் சிக்கியுள்ளனர். இறந்தவர்களின் சடலம்  பொலநறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கான தீவிர சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும், சடலங்களை மட்டக்களப்பிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் ரீ.குணரெத்தினம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விபத்தில் கல்லாறைச் சேர்ந்த சுந்தரம் உதயகுமார், வாழைச்சேனை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். ஜீவரெட்ணம், வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி. மேனகா பாஸ்கரன், ஆரையம்பதியைச் சேர்ந்த பேரின்பம் சபேசன் ஆகியோரே பலியாகியுள்ளனர்.
வாழைச்சேனையைச் சேர்ந்த வாகரை பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளரான திருமதி. மேனகா பாஸ்கரன் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மூன்றாம் இணைப்பு
கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி பொலநறுவையில் நேற்று நள்ளிரவு இடம் பெற்ற விபத்தில் 21 பேர் காயமடைந்து 4 பேர் பலியானதுடன் மேலதிக சிகிச்சைக்காக கிரான் பிரதே சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வாமதேவன் என்பவர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறந்தவர்களின் உடலங்களை மட்டக்களப்பிற்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை தாம் மேற் கொன்டுள்ளதாகவும் காயப்பட்டவர்களின் மேலதிக சிகிச்சை தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு இவ் விடயம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் சம்பவ இடத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யேகோஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

ad

ad