புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை வேட்பு மனுத் தாக்கல்

வட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அமையும் என்று தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்தன.

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் திகதியை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கவுள்ளார். பெரும்பாலும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 அல்லது 28 ஆம் திகதிகளில் சனிக்கிழமை தினம் ஒன்றில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதிகள் இன்று 11 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் அறிவிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் வட மாகாண சபை மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நிர்வாக மாவட்ட அடிப்படையில் நடைபெறும் என்பதால் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் அந்தந்த மாவட்டங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவேண்டும். குறிப்பாக வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவேண்டும்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கும் கட்டளையை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கியிருந்தார்.
அத்துடன் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் கலைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இரண்டு மாகாணங்களினதும் ஆளுநர்கள் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே வட மாகாண சபை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதிகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

ad

ad