புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2013

அரசின் தேர்தல் வியூகம்: வடக்கில் 335 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனங்கள்! 28 சிங்களவர்களும் உள்ளடக்கம்- அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு
வடமாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் 28 சிங்களவர்கள் உட்பட்ட 335 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் அவசரமாக நியமனங்களை வழங்கியுள்ளது.
ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகள் 101 பேருக்கும், தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா பட்டதாரிகள் 97 பேருக்கும், உடற்கல்வி டிப்ளோமா பட்டதாரிகள் 137 பேருக்கும், நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது வாக்குகளை இலக்கு வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கு கொள்வது நிச்சயமற்றுள்ள நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன.
இதேவேளை சுகாதாரத் தொண்டர்கள் உள்ளிட்ட சிலருக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் அரச தரப்பினருக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக திடீரென்று இரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்கு அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு
வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளுக்கு அடையாள அட்டை தொடர்பான கருத்தரங்கொன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது.
யாழ்.நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை முதல் மாலை வரையில் இந்த கருத்தரங்கு நடாத்தப்படுகின்றது.
இதில் கபே அமைப்பினர் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் ஆட்பதிவு திணைக்களம் என்பன தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளன.
இதில் தேர்தலுக்கு முன்னர் பொது மக்களுக்கு எவ்வாறு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் அடையாள அட்டை பெறுவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதில் யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம சேவகர்கள் பொலிஸார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ad

ad