புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2013

இலங்கைத் தலைவர்கள் இருவரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும்! ‘சனல்4’ பணிப்பாளர் மெக்ரே கனடாவில் தெரிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்திய பின்னரே எனக்கு நித்திரை வரும் என ‘சனல் 4’ தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார் என இலங்கைக்கு ஆதரவாக இயங்கும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவில் “நோ பயர் ஸோன்“ என்ற சனல்4 தொலைக்காட்சி சேவையின் இலங்கையின் விவரணப் படம் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியிலேயே இந்தக் கருத்தை மக்ரே வெளியிட்டுள்ளார். இயங்கும் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விரு இலங்கைத் தலைவர்களும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லையென்று கனடாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார் என இலங்கைக்கு ஆதரவாக இயங்கும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எல்.ரி.ரி.ஈ யை ஆதரிக்கும் கனடாவிலுள்ள தமிழர்களின் அமைப்பே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் உலகெங்கிலுமுள்ள எல்.ரி.ரி.ஈ அமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
மலேசியாவில் இந்த விவரணப் படம் காண்பிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு மக்ரே கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கனடாவுச் சென்றார்.
தற்பொழுது எல்.ரி.ரி.ஈ யின் தலைவராகச் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் பிரிட்டனில் இருக்கும் வணக்கத்துக்குரிய பிதா இமானுவேல் அடிகளார் விசேட அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
தன்னை ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் என்று காட்டிக்கொள்ளும் மக்ரே, எப்போதும் எல்.ரி.ரி.ஈக்கு ஆதரவாக அவர்களின் டொலர் நோட்டுகளுக்காக இலங்கை அரசாங்கத்தை தான் செல்லும் இடமெல்லாம் கண்டித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்  எனவும் இலங்கைக்கு ஆதரவாக இயங்கும் தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை: கெலம் மெக்ரே இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி
21 ஆம் நூற்றாண்டின் மோசமான போர்குற்றமாக வர்ணிக்கப்படும், இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் கொடூரங்களை உலகுக்கு அம்பலப்படுத்தி பிரபலமானவர் கெலம் மெக்ரே.
அவரது கில்லிங் பீல்ட்ஸ் (KILLING FIELDS) ஆவணப் படம் உலகம் முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரில் அப்பாவி பொதுமக்கள் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய வன்முறைகள் மற்றும் அத்துமீறல்களை பதிவு செய்தவர்.
புதிய தலைமுறைக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், சர்வதேச அளவிலான சுயேச்சையான விசாரணை நடத்த, சர்வதேச சமூகம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில் தனது ஆவணப்படம் எதிர்காலத்தில் முக்கிய சான்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதில் உலக நாடுகளுக்கும் பங்குண்டு என்று கூறும் மெக்ரே, உலகின் மற்றப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் குரல் கொடுத்த போதும், உலக நாடுகள் செவி சாய்க்கவில்லை என்கிறார்.
இறுதிப் போரில் புலிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும், மறுபுறம் இலங்கை அரசு மிகத் தந்திரமாக செயல்பட்டதாகவும் மெக்ரே கூறினார்.
மேலும், நம்பவே முடியாத அளவில் எதிர், எதிர் நாடுகளின் ஆதரவைப் பெற்ற இலங்கை, இந்தியா-பாகிஸ்தான், அமெரிக்கா-சீனா, இஸ்ரேல்-ஈரான் நாடுகளின் கூட்டுடன் போரை முன்னெடுத்துச் சென்றதாகவும், இந்த நாடுகளின் ஆதரவுடன் தான் அங்கே கொடூரமான படுகொலைகள் நடந்தன என்றும் கெலம் மெக்ரே தெரிவித்தார்.
கூட்டணி அமைத்து படுகொலை
இலங்கை அரசு இன்னமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டும் கெலம் மெக்ரே, நீதித்துறை சுயேச்சையாக செயல்படும் நிலை இல்லை என்று விமர்சிக்கிறார்.
இதுவரை இழந்திருந்த அதிகாரத்தை எப்படியாவது தக்கவைக்க அங்குள்ள அரசு செயல்பட்டு வருவதாகவும், அதற்காக அனைத்து விதமான அடக்குமுறைகளும் அங்கு செயல்படுத்தப்படுவதாகவும் மெக்ரே தெரிவித்தார்.
சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள்
சிங்களமயமாதல் தொடர்ந்து நடந்து வரும் இலங்கையில், ஒரு வகையான பாசிசப்போக்கு அங்கு நிலவுகிறது என்றார்.
மேலும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மத்தியில் அச்ச உணர்வு தூண்டப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மெக்ரே, நீதித்துறை, பத்திரிக்கைத் துறை மீதான அத்துமீறல்களும் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டார்.
கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க தமக்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள கெலம் மெக்ரே, மனித உரிமைகளை அடிப்படை நோக்கமாக கொண்ட கொமன்வெல்த்தின் இலட்சியத்திற்கே இலங்கை நாடு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
கொமன்வெல்த்தின் நோக்கம் சிதைகிறது
நடைபெற்ற குற்றங்களுக்கு மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மை கூட இல்லாத இலங்கையில், கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் கொமன்வெல்த் அமைப்பே கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மெக்ரே குற்றம்சாட்டினார்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு கொமன்வெல்த்தின் தலைவராக இலங்கை தலைவர்கள் பதவி வகிக்க உள்ளனர். இருப்பினும் இந்த மாநாடு மூலமாக இலங்கை போர்க்குற்றங்கள் மீது உலகின் கவனம் குவியும் என்றார் மெக்ரே.
எனினும், கொமன்வெல்த் மாநாட்டின் மூலம் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையை அனுமதிக்க இலங்கை அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கலாம் என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆனால், கொமன்வெல்த் நாடுகள் அமைப்பின் தலைவராக ராஜபக்ச அடுத்த இரண்டு ஆண்டுகள் பதவி வகிக்கவுள்ள நிலையில், இலங்கை சர்வதேச விசாரணை நடத்துவதற்கு வலியுறுத்தப்படுமா என்பதும் கெலம் மெக்ரேவின் ஆதங்கமாக உள்ளது.

ad

ad