புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2013

விளக்கம் அளிக்க வருமாறு அமெரிக்கத் தூதுவருக்கு சிறிலங்கா அழைப்பு

விளக்கம் அளிக்க வருமாறு அமெரிக்கத் தூதுவருக்கு சிறிலங்கா அழைப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் சிறிலங்கா விளக்கம் கோரியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு வருமாறு அமெரிக்கத் தூதுவர் மிசல் ஜே சிசன் அழைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம், அந்த பயண எச்சரிக்கை விடப்பட்டது ஏன் என்று விளக்கம் கேட்கவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் அவதானமாக இருக்கும்படியும், அங்கு வெளிநாட்டவர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரித்திருந்தது.

அண்மைய மாதங்களில் சிறிலங்காவில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள் நடப்பது அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதன்காரணமாக, சிறிலங்கா அரசாங்கம் எல்லா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும், தமது கடவுச்சீட்டை தங்கு விடுதிகளில் கொடுத்து தகவல்களை பதிவு செய்யுமாறு கோரியுள்ளதாகவும், அது உள்ளூர் அதிகாரிகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க வசதியாக இருக்கும் என்றும் அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காவில் பொதுப் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டாம் என்றும், அதில் பயணிகள் குற்றவாளிகளால் இலக்கு வைக்கப்படலாம் என்றும், சாரதிகள் வாகனம் செலுத்தும் ஒழுங்குமுறையை பின்பற்றுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணிகள், குறிப்பாக பெண்கள் சாத்தியமானளவுக்கு வேறு துணையுடன் பயணம் செய்வது குறித்து சநித்திக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட அயுதக் குழுக்கள் இருப்பதாகவும் அவை, ஆட்கடத்தல்கள், வன்முறைகளில் ஈடுபடுவதாகவும், எனினும், அவர்களால் அமெரிக்க குடிமக்களுக்கு ஆபத்து உள்ளது என்பதற்கு சான்றுகள் இல்லை என்றும் அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நீதித்துறை முறைமை அமெரிக்காவை விட வேகம் குறைவானது.

வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல்கள்,கொலைகள் தொடர்பான வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

பிரித்தானியர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையவர் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

சிறிலங்காவில் ஆண்களைக் கொண்ட குழுக்களால் வாய்மூலமும், உடல் மூலமும் தாம் துன்புறுத்தப்படுவதாக மேற்கு நாட்டுப் பெண்கள் பலர் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வருகின்றனர்.

அத்தகைய துன்புறுத்தல் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

பெரும்பாலான சம்பவங்கள், சனநெருக்கடி மிக்க சந்தைகள், தொடருந்து நிலையம், பேருந்துகள், வீதிகள், விளையாட்டு நிகழ்வுகளின் போதே அதிகம் நிகழ்கிறது.

வெளிநாட்டுப் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் இடம்பெறுவதால், அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad