புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,


இளவரசனுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை : திவ்யா
தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதலர்கள் இளவரசன் - திவ்யா பிரிந்தனர். திவ்யா தனது தாயாருடன் தான் செல்ல விரும்புவதாக சென்னை
ஐகோர்ட்டில் கூறிவிட்டதால், நீதிபதியும் அதற்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து திவ்யா,  ’’இளவரசனை விரும்பித்தான் திருமணம் செய்தேன். அதன் பின்னர் அப்பா இறந்துவிட்டார். ஊரிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அதனால் அந்த கஷ்டங்களும், அப்பாவின் இழப்பு மட்டும்தான் என் நினைவில் இருந்தன. அதனால் அவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. வேறு எந்த ஆசையும், எண்ணமும் அவர் மீது தோன்றவில்லை. 
எனக்கு அப்பாவின் நினைவு மட்டும்தான் உள்ளது. அன்றிருந்த சூழ்நிலையில் என்னால் அங்கிருந்து மீறி உடனே வர முடியவில்லை. எனவேதான் இவ்வளவு நாட்களை நான் எடுத்துக்கொண்டேன். இப்போது நான் வந்துவிட்டேன். 
இளவரசன் வேண்டாம் என்று அப்பா கூறியிருந்த நிலையில், இனிமேல் எந்த சூழ்நிலையிலும் அவருடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மாவுடன் இருந்து எனது அப்பாவின் இடத்தை என்னால் முடிந்தவரை ஈடு செய்வேன். 
அம்மாவும் வேண்டும், அவரும் வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்தேன். ஆனால் எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை. நான் எப்போது என்றாலும் சேர்ந்து வாழ தயாராக இல்லை. அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன். 
ஆனால், இளவசரனுடன் வாழத் தயார் என்று நீதிபதிகளிடம் நான் கூறியதாக எதிர்த்தரப்பினர் தவறான தகவலை வெளியிட்டுவிட்டனர். நான் எனது தாயார், உறவினர்களின் ஆதரவை பெறுவதற்காக, 'நான் செய்தது தவறு' என்று கூறியிருந்த நிலையில், இப்படி ஒரு தவறான தகவலை கொடுத்துவிட்டனர். இதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன்’’என்று கூறினார்.

ad

ad