புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2013

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடக்கு மாகாண முதலமைச்சராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சராக தான் நியமிக்கப்படும் வகையில், மாகாண சபைகள் தொடர்பான கட்டளைச் சடத்தில், திருத்தம் செய்யும் யோசனை ஒன்றை தேவானந்த அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக ஈபிடிபியின் தகவல்கள் தெரிவித்தன.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில், இல்லாத வெளியில் இருந்து உறுப்பினரை நியமிக்க கட்சி செயலாளருக்கு இருக்கும் அதிகாரத்திற்கு மீண்டும் உயிரூட்டும் வகையில், புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்க அமைச்சர் எதிர்பார்த்துள்ளார்.
மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில் இந்த நடைமுறை இருந்து வந்தது, வடமத்திய மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் மார்க் பெர்ணான்டோ வழங்கிய தீர்ப்புக்கு அமைய தேர்தலில் போட்டியிடாத ஒருவரை உறுப்பினராக நியமிக்கும் சட்டம் இரத்துச் செய்யப்பட்டது.
அமைச்சர் தேவானந்தா முன்வைக்கும் யோசனையில், சம்பந்தப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை 

ad

ad