புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2013

,


தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில்
 சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா

 புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம் சார்பில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநிலத்திலும், மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்
தnakeeran  மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு பாராட்டு விழாவும், இல்ல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு விழாவும் மிகச்சிறப்பாக சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு முகாம் தலைவர் ச.கமலநாதன் தலைமை தாங்கினார். ஸ்ரீ பாரதி நிறுவனங்களின் தலைவர் குருதனசேகரன், முத்துப்பட்டிணம் தொழிலதிபர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்து விளக்கினை ஆலங்குடி வட்டாட்சியர் கே.கோவிந்தசாமி ஏற்றிவைத்தார். திருரவங்குளம் ஒன்றியம் கவுன்சிலர் ரெ.ஆறுமுகம், திருவரங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் அ.கருப்பையா, வல்லத்திராக் கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரம்யா, மக்கள் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன், சாமித்தேவர் (அகதிகள் நல), என்.செல்வவிநாயகம் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் எம்.பிரகாஷ், எம்.சுலோக்ஷனா, பத்திர எழுத்தர் என்.முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குப.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாம் சார்பில் மாநில அளவில் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தேவக்கோட்டை என்.அருள்ராஜன், சென்னை பிரித்திவி ராஜ், மூன்றாம் இடங்களை இரண்டு பேர் பவானிசாகர் அ.கேதீஸ்வரன், பரமத்தி ஆர்.அனுசன், 10ம் வகுப்பில் பழனி புளியம்பட்டியைச் சேர்ந்த ஸ்பைனாஸ்வீட்டி, கொட்டப்பட்டு மாணவிகள் பவித்ரா, கவிதா முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். 
மாவட்ட அளவில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் மாணவி கோகிலா, அழியாநிலை மாணவர் அகிம் சுந்தர், தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் மாணவி நிலகேந்தரி ஆகியோருக்கு பரிசுக்கான கேடயங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகக்குழு அ.வரதராஜன் (பொருளாளர்), எம்.விஜயராஜா (துணைத் தலைவ ர்), எம்.அருட்சிங்கம் (துணைச் செயலாளர்), நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஐ.கணேசன், வி.ரவிச் சந்திரன், ஏ.லோகேந்திரன், பி.குருபரன், எஸ்.இந்துமதி, ஆர்.ராதா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக முகாம் செயலாளர் சூ.ஜெயசீலன் குரூஸ் வரவேற்புரை வழங்கினார். முடிவில் ஆலோசகர் இம்மானுவேல் நன்றி கூற விழா இனிதே நடைபெற்றது.

ad

ad