புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2013


முன்னாள் அமைச்சரின் மகளை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைவரும், நடிகருமான சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்
தகவல் வெளியிட்டுள்ளது.
இயக்குனரும் நடிகரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் முன்னாள் அதிமுக அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், வருகிற ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad